இலங்கை A மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெற்ற இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை A அணி 86 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் இலகு வெற்றி
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை A கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது.
முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A கிரிக்கெட் அணியின் தலைவர் சதீர சமரவிக்ரம முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை A கிரிக்கெட் அணி சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றதோடு லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் அரைச்சதங்களோடு 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த லசித் குரூஸ்புள்ளே 67 பந்துகளில் 13 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் நுவனிது பெர்னாண்டோ ஒரு சிக்ஸர் 5 பௌண்டரிகள் உடன் 57 ஓட்டங்கள் எடுக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் 4 பௌண்டரிகள் உடன் 50 ஓட்டங்கள் பெற்றார். இவர்களுடன் இலங்கை A அணித்தலைவர் சதீர சமரவிக்ரமவும் 40 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பிற்கு பலம் சேர்த்தார்.
மறுமுனையில் இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சின் சார்பில் மேசோன் கிரேன் 3 விக்கெட்டுக்களையும், ஜகோப் பெத்தேல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 316 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து லயன்ஸ் வீரர்கள் 39.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 229 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவினர்.
>> தலையில் பந்து தாக்கியதால் வெளியேறிய டேவிட் வோர்னர்
இங்கிலாந்து லயன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் டொம் ப்ரெஸ்ட் ஒரு சிக்ஸர் 6 பௌண்டரிகள் அடங்கலாக 68 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்தார்.
இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்பந்துவீச்சாளரான துஷான் ஹேமன்த 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
இனி இலங்கை A – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) நடைபெறுகின்றது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lasith Croospulle | c Tom Prest b Mason Crane | 73 | 67 | 12 | 0 | 108.96 |
Avishka Fernando | lbw b Sam Cook | 11 | 15 | 2 | 0 | 73.33 |
Nuwanidu Fernando | lbw b Jacob Bethell | 57 | 70 | 5 | 1 | 81.43 |
Angelo Mathews | c Jacob Bethell b Mason Crane | 50 | 53 | 4 | 0 | 94.34 |
Sadeera Samarawickrama | c & b Jacob Bethell | 40 | 42 | 2 | 0 | 95.24 |
Sahan Arachchige | c Matt Fisher b Mason Crane | 9 | 9 | 1 | 0 | 100.00 |
Suminda Lakshan | run out () | 35 | 27 | 2 | 1 | 129.63 |
Dunith Wellalage | not out | 15 | 17 | 0 | 0 | 88.24 |
Extras | 25 (b 0 , lb 9 , nb 0, w 16, pen 0) |
Total | 315/7 (50 Overs, RR: 6.3) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 9 | 1 | 51 | 1 | 5.67 | |
Matt Fisher | 5 | 0 | 36 | 0 | 7.20 | |
Brydon Carse | 6 | 0 | 50 | 0 | 8.33 | |
Tom Hartley | 10 | 0 | 59 | 0 | 5.90 | |
Mason Crane | 10 | 0 | 55 | 3 | 5.50 | |
Jacob Bethell | 10 | 0 | 55 | 2 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jack Haynes | st Sadeera Samarawickrama b Suminda Lakshan | 36 | 43 | 5 | 0 | 83.72 |
Jacob Bethell | lbw b Dunith Wellalage | 19 | 18 | 2 | 1 | 105.56 |
Tom Prest | b Dushan Hemantha | 67 | 68 | 6 | 1 | 98.53 |
James Rew | lbw b Dunith Wellalage | 42 | 46 | 4 | 0 | 91.30 |
Jordan Cox | c Dunith Wellalage b Dushan Hemantha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Matt Critchley | st Sadeera Samarawickrama b Dushan Hemantha | 4 | 7 | 0 | 0 | 57.14 |
Brydon Carse | c Sadeera Samarawickrama b Sahan Arachchige | 17 | 17 | 0 | 1 | 100.00 |
Tom Hartley | c Dushan Hemantha b Pramod Madushan | 23 | 21 | 2 | 0 | 109.52 |
Matt Fisher | c & b Dushan Hemantha | 8 | 8 | 0 | 1 | 100.00 |
Mason Crane | c Sadeera Samarawickrama b Dushan Hemantha | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Sam Cook | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Extras | 8 (b 0 , lb 2 , nb 2, w 4, pen 0) |
Total | 229/10 (39.1 Overs, RR: 5.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Pramod Madushan | 4 | 0 | 21 | 1 | 5.25 | |
Kavishka Anjula | 4 | 0 | 18 | 0 | 4.50 | |
Dunith Wellalage | 10 | 0 | 61 | 2 | 6.10 | |
Suminda Lakshan | 7 | 0 | 45 | 1 | 6.43 | |
Sahan Arachchige | 6 | 0 | 39 | 1 | 6.50 | |
Dushan Hemantha | 8.1 | 0 | 43 | 5 | 5.31 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<