ஏப்ரல் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட் அணி இலங்கையில் ஒரு டெஸ்ட் மற்றும் இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் விளையாடவிருக்கின்றது.
நிஷான் மதுஷ்க, கமிந்துவின் ஆட்டத்தோடு பலம் பெற்றுள்ள இலங்கை A அணி
அதன்படி இரு அணிகளும் பங்கெடுக்கும் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, இந்த டெஸ்ட் போட்டியே அயர்லாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் வரலாற்றில் விளையாடவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியாகவும் அமைகின்றது.
அத்துடன் இலங்கை – அயர்லாந்து இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி அயர்லாந்து ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவ உறுப்புரிமையினை கடந்த 2017ஆம் ஆண்டில் பெற்ற பின்னர் விளையாடவுள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியாகவும் மாறுகின்றது. எனவே அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு இலங்கை சுற்றுப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக காணப்படுகின்றது.
அயர்லாந்து – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையும், அதன் பின்னர் ஒருநாள் தொடர் ஏப்ரல் மாதம் 26ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறுகின்றன.
>> இலங்கையின் இறுதி போட்டி வாய்பிற்கு ஆஸி. உதவும் – மஹேல
இதேவேளை அயர்லாந்து அணி இலங்கை சுற்றுப் பயணத்திற்கு முன்னதாக பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கே ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 3 T20I போட்டிகள் கொண்ட மூவகை கிரிக்கெட் தொடர்களில் ஆடவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சுற்றுத்தொடர் அட்டவணை
டெஸ்ட் போட்டி – ஏப்ரல் 18-22 – காலி சர்வதேச மைதானம்
முதல் ஒருநாள் – ஏப்ரல் 26 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்
இரண்டாவது ஒருநாள் – ஏப்ரல் 28 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<