Home Tamil இறுதி ஓவரில் இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் மகளிர்

இறுதி ஓவரில் இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் மகளிர்

276

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெற்ற மகளிர் T20 உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.

>> பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி த்ரில்லர் வெற்றி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு T20 உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது பயிற்சிப் போட்டியாக அமைந்த மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டி புதன்கிழமை (08) தென்னாபிரிக்காவின் கேப் டவுன் அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 107 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சு சார்பில் அதன் தலைவி ஹேய்லி மெதிவ்ஸ் 3 விக்கெட்டுக்களையும், கரிஷ்மா ரம்ஹராக் மற்றும் ஏபி பிளச்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 108 ஓட்டங்களை அடைய பதில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி சற்று தடுமாறிய போதும் 19.4 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கினை 6 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களுடன் அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த, துடுப்பாட்டத்தில் மீண்டும் அபாரம் காட்டிய அதன் தலைவி ஹேய்லி மெதிவ்ஸ் 48 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.

>> தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை அதிரடியால் மீட்ட தசுன் ஷானக

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி, இனோக்கா ரணவீர மற்றும் மல்ஷா செஹானி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்த போதும் அவர்களின் பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka Women
107/10 (20)

West Indies Women
111/6 (19.4)

Batsmen R B 4s 6s SR
Harshitha Samarawickrama st Rashada Williams b Karishma Ramharack 16 20 1 0 80.00
Chamari Athapaththu lbw b Aaliyah Alleyne 1 4 0 0 25.00
Vishmi Gunaratne run out (Shemaine Campbelle) 13 15 2 0 86.67
Nilakshika Silva c Shakera Selman b Hayley Matthews 29 26 2 1 111.54
Anushka Sanjeewani b Afy Fletcher 9 16 1 0 56.25
Kavisha Dilhari c Chinelle Henry b Afy Fletcher 16 16 1 0 100.00
Malsha Shehani b Hayley Matthews 9 14 1 0 64.29
Ama Kanchana c & b Karishma Ramharack 0 0 0 0 0.00
Sugandika Kumari run out () 4 7 0 0 57.14
Achini Kulasuriya b Hayley Matthews 0 2 0 0 0.00
Inoka Ranaweera not out 1 1 0 0 100.00


Extras 9 (b 0 , lb 1 , nb 1, w 7, pen 0)
Total 107/10 (20 Overs, RR: 5.35)
Bowling O M R W Econ
Chinelle Henry 3 0 17 0 5.67
Aaliyah Alleyne 2.5 0 20 1 8.00
Hayley Matthews 4 0 17 3 4.25
Karishma Ramharack 3 0 13 2 4.33
Shabika Gajnabi 2 0 12 0 6.00
Afy Fletcher 4 0 13 2 3.25
Shakera Selman 1.1 0 14 0 12.73


Batsmen R B 4s 6s SR
Hayley Matthews run out (Anushka Sanjeewani) 50 48 4 1 104.17
Shabika Gajnabi c Anushka Sanjeewani b Kavisha Dilhari 15 30 1 0 50.00
Zaida James run out () 1 3 0 0 33.33
Chedean Nation run out (Sugandika Kumari) 6 7 1 0 85.71
Rashada Williams st Anushka Sanjeewani b Inoka Ranaweera 0 6 0 0 0.00
Aaliyah Alleyne c & b Malsha Shehani 2 7 0 0 28.57
Chinelle Henry not out 14 14 1 0 100.00
Afy Fletcher not out 6 4 1 0 150.00


Extras 17 (b 2 , lb 9 , nb 1, w 5, pen 0)
Total 111/6 (19.4 Overs, RR: 5.64)
Bowling O M R W Econ
Achini Kulasuriya 2 0 11 0 5.50
Sugandika Kumari 4 0 24 0 6.00
Ama Kanchana 1 0 4 0 4.00
Malsha Shehani 2 0 11 1 5.50
Inoka Ranaweera 4 0 20 1 5.00
Kavisha Dilhari 3.4 0 17 1 5.00
Chamari Athapaththu 3 0 13 0 4.33



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<