Home Tamil சுபர் சிக்ஸ் சுற்றில் இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை U19 அணி!

சுபர் சிக்ஸ் சுற்றில் இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை U19 அணி!

ICC U19 Women’s T20 World Cup 2023

268

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தின் சுபர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியினை பதிவுசெய்துக்கொண்டது.

முதல் வெற்றிகளை பதிவு செய்த கண்டி, காலி அணிகள்

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணியானது, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை மகளிர் அணிக்கு வழங்கியது.

அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணித்தலைவி விஷ்மி குணரத்ன மாத்திரம் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, 20 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் பந்துவீச்சில் பிரசவி சோப்ரா 4 விக்கெட்டுகளையும், மன்னட் குஷியப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி இலகுவான வெற்றியிலக்கை நோக்கி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. தெவ்மி விஹங்கா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், சௌமியா திவாரி 15 பந்துகளில் 28 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

எனவே இந்திய 19 வயதின் கீழ் மகளிர் அணியானது வெறும் 7.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை பதிவுசெய்துக்கொண்டது. அதுமாத்திரமின்றி இலங்கை மகளிர் அணியானது சுபர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளதன் காரணமாக தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இலங்கை மகளிர் அணி தங்களுடைய அடுத்தப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை நாளை செவ்வாய்க்கிழமை (24) எதிர்கொள்ளவுள்ளது.

Result


India Women U19
60/3 (7.2)

Sri Lanka Women U19
59/9 (20)

Batsmen R B 4s 6s SR
Nethmi Senarathna c Archana Devi b Titas Sadhu 0 1 0 0 0.00
Sumudu Nisansala c Soumya Tiwari b Mannat Kashyap 2 5 0 0 40.00
Vishmi Gunarathne c & b Parshavi Chopra 25 28 2 0 89.29
Dewmi Vihanga lbw b Mannat Kashyap 2 10 0 0 20.00
Umaya Rathnayake c Titas Sadhu b Archana Devi 13 36 1 0 36.11
Manudi Nanayakkara c Archana Devi b Parshavi Chopra 5 16 0 0 31.25
Vihara Sewwandi lbw b Parshavi Chopra 0 3 0 0 0.00
Dulanga Dissanayke c Shweta Sehrawat b Parshavi Chopra 2 7 0 0 28.57
Rashmi Nethranjali not out 6 10 0 0 60.00
Vidushika Perera run out (Shafali Verma) 3 4 0 0 75.00


Extras 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total 59/9 (20 Overs, RR: 2.95)
Bowling O M R W Econ
Titas Sadhu 3 0 10 1 3.33
Mannat Kashyap 4 1 16 2 4.00
Sonam Yadav 3 0 7 0 2.33
Parshavi Chopra 4 1 5 4 1.25
Archana Devi 4 0 15 1 3.75
Shafali Verma 2 0 6 0 3.00


Batsmen R B 4s 6s SR
Shafali Verma lbw b Dewmi Vihanga 15 10 1 1 150.00
Shweta Sehrawat c & b 13 17 2 0 76.47
Richa Ghosh c Vihara Sewwandi b Dewmi Vihanga 4 2 1 0 200.00
Soumya Tiwari not out 28 15 5 0 186.67
Gongadi Trisha not out 0 0 0 0 0.00


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 60/3 (7.2 Overs, RR: 8.18)
Bowling O M R W Econ
Dewmi Vihanga 4 0 34 3 8.50
Vidushika Perera 3.2 1 26 0 8.12



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<