“BBL தொடரிலிருந்து வெளியேறிவிடுவேன்” – அவுஸ்திரேலியாவுக்கு ரஷீட் எச்சரிக்கை!

Afghanistan Cricket

415

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக்கில் (BBL) தொடர்ந்தும் விளையாடுவது தொடர்பில் சிந்திக்கவேண்டும் என ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷீட் கான் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கமுடியாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நேற்றைய தினம் (12) அறிவித்திருந்தது.

ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி

ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபன் அமைப்பு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உரிமைகளை மட்டுப்படுத்துவதாக அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தொடரில் பங்கேற்க முடியாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை குறிப்பிட்டிருந்தது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இந்த தீர்மானம் தொடர்பில் ஏமாற்றமடைந்துள்ளதன் காரணமாக, BBL தொடரிலிருந்து விலகுவதற்கு சிந்திப்பதாக ரஷீட் கான் குறிப்பிட்டுள்ளார்.

ரஷீட் கானின் பதிவில், “அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த தொடரிலிருந்து விலகியமை ஏமாற்றமளிக்கிறது. எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைக்கொள்கிறேன். உலக அளவில் நாம் முன்னேற்றம் அடைந்துவருகின்றோம். அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இந்த முடிவு எமது பயணத்துக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

துடுப்பாட்டத்தில் மத்தியவரிசை! ; பந்துவீச்சில் புதிய சிக்கல்?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது அவுஸ்திரேலியாவுக்கு கடினமாக இருந்தால், BBL தொடரில் நான் விளையாடி யாரையும் அசௌகரியப்படுத்த விரும்பவில்லை. எனவே, இந்த தொடரில் என்னுடைய எதிர்காலம் தொடர்பில் நான் ஆலோசிப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

BBL தொடரில் அடிலைட் ஸ்ரைக்கர் அணிக்காக விளையாடிவரும் ரஷீட் கான் 8 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<