ஆப்கானிஸ்தான் தொடரில் ஆட மறுக்கும் ஆஸி

309

ஆப்கானிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியுடன் மார்ச் மாத இறுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> ஸ்கொட்லாந்தை வீழ்த்திய இலங்கை U19 மகளிர் அணி!

ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபன் அமைப்பு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உரிமைகளை மட்டுப்படுத்துவதாக அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மார்ச் மாதம் ஐக்கிய அரபு இராட்சியத்தில் இடம்பெற இருந்த ஆப்கான் அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்றது.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரினை இரத்துச் செய்வது தொடர்பிலான அறிவிப்பினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தமது டுவிட்டர் கணக்கு வாயிலாக உறுதி செய்திருக்கின்றது.

அதேநேரம் ஆப்கான் – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இந்த ஒருநாள் தொடர் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் உள்ளடங்குவதால் தொடருக்கு வழங்கப்படும் 30 புள்ளிகளும் ஆப்கானிஸ்தான் அணியினை சென்றடையும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஆப்கானிஸ்தானின் நிலைமைகள் குறித்து தமது குழு தொடர்ந்தும் அவதானித்து வருவதாக ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரியாக (CEO) இருக்கும் ஜியோப் அல்லார்டிஸ் உம் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் ஆப்கான் தொடர்பில் அடுத்த ஐ.சி.சி. இன் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

>> பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியார் பதவியை ஏற்க மறுத்த மிக்கி ஆத்தர்

ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவ உறுப்புரிமையினைப் பெற்ற போதும் ஆப்கானிஸ்தான் மாத்திரமே மகளிர் கிரிக்கெட் அணியொன்று இல்லாத அணியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம்: India Today

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<