Home Tamil சூர்யகுமாரின் அதிரடியோடு T20 தொடரினை கைப்பற்றிய இந்தியா

சூர்யகுமாரின் அதிரடியோடு T20 தொடரினை கைப்பற்றிய இந்தியா

Sri Lanka Tour of India 2023

269

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான T20I தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

தசுன் ஷானக்கவின் அதிரடியோடு தொடரினை சமநிலை செய்த இலங்கை

முன்னதாக ராஜ்கோட் நகரில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது அணிக்காகப் பெற்றுக் கொண்டார்.

T20I தொடர் ஏற்கனவே 1-1 என சமநிலை அடைந்த நிலையில் இலங்கை இப்போட்டியில் ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது. அதன்படி அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷவிற்குப் பதிலாக இணைக்கப்பட்டிருந்தார். மறுமுனையில் இந்திய அணி மாற்றங்களின்றி களமிறங்கியிருந்தது.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுசங்க

இந்தியா XI

சுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (தலைவர்), ராகுல் த்ரிபாட்டி, தீபக் ஹுடா, அக்ஷார் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சிவம் மாவி, உம்ரான் மலிக், யுஸ்வேந்திர சாஹல்

தொடர்ந்து முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி போட்டியின் முதல் ஓவரிலேயே டில்சான் மதுசங்கவின் பந்துவீச்சில் இஷான் கிஷனின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. இஷான் கிஷன் ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை நடந்தார்.

அதன் பின்னர் புதிய வீரராக ராகுல் த்ரிபாட்டி அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியின் ஓட்டங்களை அதிகரிக்கத் தொடங்கியிருந்தார். வெறும் 16 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழு விபரம் வெளியானது!

எனினும் புதிய வீரராக வந்த சூர்யகுமார் யாதவ் களத்தில் இருந்த சுப்மான் கில்லுடன் இணைந்து இலங்கைப் பந்துவீச்சாளர்களை திணறடிக்கும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, இந்திய அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 111 ஓட்டங்களைப் பகிர்ந்தார். தொடர்ந்து இந்திய அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த சுப்மான் கில் 36 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் உடன்  46 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுப்மான் கில்லின் விக்கெட்டினை அடுத்து இந்திய அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும் தொடர்ந்தும் மைதானத்தில் வானவேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியோடு இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் T20I போட்டிகளில் தான் பெற்ற மூன்றாவது சதத்துடன் 51 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஏனைய வீரரான அக்ஷார் பட்டேல் 4 பெளண்டரிகள் உடன் 9 பந்துகளுக்கு 21 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ஓட்டங்களை வாரி வழங்கிய இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 2 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க, கசுன் ராஜித மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 229 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி குசல் மெண்டிஸ் மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்ற போதும், தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்ததன் காரணமாக 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்கள் எடுக்க, தசுன் ஷானக்கவும் 17 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், உம்ரான் மலிக், ஹர்திக் பாண்டியா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் துடுப்பாட்டவீரரான சூர்யகுமார் யாதவ் தெரிவாக தொடர் நாயகன் விருது அக்ஷார் பட்டேலுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இனி இலங்கை அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் அடுத்த கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) ஆரம்பமாகுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


India
228/5 (20)

Sri Lanka
137/10 (16.4)

Batsmen R B 4s 6s SR
Ishan Kishan c Dhananjaya de Silva b Dilshan Madushanka 1 2 0 0 50.00
Shubman Gill b Wanidu Hasaranga 46 36 2 3 127.78
Rahul Trpathi c Dilshan Madushanka b Chamika Karunaratne 35 16 5 2 218.75
Suryakumar Yadav not out 112 51 7 9 219.61
Hardik Pandya c Dhananjaya de Silva b Kasun Rajitha 4 4 0 0 100.00
Deepak Hooda  c Wanidu Hasaranga b Dilshan Madushanka 4 2 1 0 200.00
Axar Patel not out 21 9 4 0 233.33


Extras 5 (b 0 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total 228/5 (20 Overs, RR: 11.4)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 4 0 55 2 13.75
Kasun Rajitha 4 1 35 1 8.75
Maheesh Theekshana 4 0 48 0 12.00
Chamika Karunaratne 4 0 52 1 13.00
Wanidu Hasaranga 4 0 36 1 9.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Shivam Mavi b Arshdeep Singh 15 17 3 0 88.24
Kusal Mendis c Umran Malik b Axar Patel 23 15 2 2 153.33
Avishka Fernando c Arshdeep Singh b Hardik Pandya 1 3 0 0 33.33
Dhananjaya de Silva c Shubman Gill b Yuzvendra Chahal 22 14 2 1 157.14
Charith Asalanka c Shivam Mavi b Yuzvendra Chahal 19 14 2 0 135.71
Dasun Shanaka c Axar Patel b Arshdeep Singh 23 17 0 2 135.29
Wanidu Hasaranga c Deepak Hooda  b Umran Malik 9 8 1 0 112.50
Chamika Karunaratne lbw b Hardik Pandya 0 2 0 0 0.00
Maheesh Theekshana b Umran Malik 2 5 0 0 40.00
Kasun Rajitha not out 9 4 2 0 225.00
Dilshan Madushanka b Arshdeep Singh 1 2 0 0 50.00


Extras 13 (b 0 , lb 1 , nb 1, w 11, pen 0)
Total 137/10 (16.4 Overs, RR: 8.22)
Bowling O M R W Econ
Hardik Pandya 4 0 30 2 7.50
Arshdeep Singh 2.4 0 20 3 8.33
Shivam Mavi 1 0 6 0 6.00
Axar Patel 3 0 19 1 6.33
Umran Malik 3 0 31 2 10.33
Yuzvendra Chahal 3 0 30 2 10.00




[/vc_column_text]

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<