முக்கிய துடுப்பாட்டவீரரினை இழக்கும் இந்திய கிரிக்கெட் அணி

Sri Lanka tour of India 2023

289

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான சஞ்சு சாம்ஷன் இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T20I தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கு சவாலானதா?- கூறும் நவீட் நவாஸ்!

சஞ்சு சாம்ஷனிற்கு முழங்காலில் ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே அவர் இந்திய – இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்திலும் இருந்து விலகுகின்றார்.

சஞ்சு சாம்ஷன் குறுகிய இடைவெளி ஒன்றின் பின்னர் இந்திய அணிக்குத் திரும்பியிருந்த நிலையில் மீண்டும் உபாதையினால் வெளியேறி இருப்பது  ஏமாற்றத்தினை தருவதோடு, அது இந்திய T20I அணிக்கும் பின்னடைவாக அமைந்திருக்கின்றது.

சாம்ஷன் இல்லாத நிலையில் இந்திய அணி விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான ஜித்தெஷ் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. ஜித்தெஷ் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WATCH – முதல் T20I போட்டியின் தோல்விக்கான காரணம் என்ன? கூறும் நவீட் நவாஸ்!

இதேநேரம் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றிருக்க, தொடரின் தீர்மானம் கொண்ட இரண்டாவது T20I போட்டி இன்று (05) பூனே நகரில் ஆரம்பமாகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<