சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான போட்டி வர்ணணையாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்டுள்ள வர்ணணையளார்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் குமார் சங்கக்கார இடம்பெற்றுள்ளார்
>> இலங்கையின் முன்னேற்ற பாதையை ஆரம்பித்த 2022ம் ஆண்டு!
குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இங்கிலாந்தின் மெரில்போன் (MCC) கழகத்தின் தலைவராக செயற்பட்டுவந்தார். அதனைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு, குறித்த பதவியில் தொடர்ந்தும் நீடிக்கிறார்.
அதுமாத்திரமின்றி ஐசிசியின் முக்கியமான தொடர்கள் மற்றும் இலங்கை அணி விளையாடும் ஒருசில தொடர்களில் கிரிக்கெட் வர்ணணையாளராகவும் செயற்பட்டுவந்தார். இந்தவரியைில் தற்போது இலங்கை – இந்திய தொடரில் வர்ணணையளாராக பெயரிடப்பட்டுள்ளார்.
>> ஹஸரங்கவின் இடத்தை நிரப்புவதற்கு நான் கஷ்டப்பட்டேன்” – வியாஸ்காந்த்!
இலங்கையைச் சேர்ந்த குமார் சங்கக்கார மாத்திரம் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன் சுனில் கவாஸ்கர், ஹர்ஷ போக்லே, முரளி காரத்திக், தீப் தேசகுப்தா மற்றும் அஜித் அகாகர் ஆகிய இந்தியர்கள் வர்ணணையளாராக இணைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று T20I மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமாகவுள்ளது. T20I தொடர் இம்மாதம் 3ம் திகதி முதல் 7ம் திகதிவரை ஆரம்பமாகவுள்ளதுடன், ஒருநாள் தொடர் 10ம் திகதி முதல் 15ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<