Home Tamil மூன்றாவது முறையாக தொடர்ந்தும் LPL சம்பியனான ஜப்னா கிங்ஸ்

மூன்றாவது முறையாக தொடர்ந்தும் LPL சம்பியனான ஜப்னா கிங்ஸ்

324

ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் மூன்றாவது பருவத்திற்கான (2022) இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 02 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்த வெற்றியுடன் ஜப்னா கிங்ஸ் அணி LPL தொடரின் மூன்றாவது பருவத்திற்கான தொடரிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக LPL சம்பியன்களாக வரலாறு படைத்திருக்கின்றது.

நேற்று (23) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் கொழும்பு ஸ்டார்ஸ் வீரர்களை துடுப்பாடப் பணித்திருந்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையாத போதும் தினேஷ் சந்திமால், ரவி பொப்பரா ஆகியோர் நிதானமாக ஆடி வெளிப்படுத்திய துடுப்பாட்டங்கள் கை கொடுத்திருந்தன.

இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு தொடர்ந்து கொழும்பு ஸ்டார்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்கள் பெற்றது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினேஷ் சந்திமால் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 40 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்திருக்க, ரவி பொப்பரா இறுதி வரை ஆட்டமிழக்காது 33 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் அடங்கலாக ஒரு பெளண்டரி அடங்கலாக 47 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

மறுமுனையில் ஜப்னா கிங்ஸ் அணி பந்துவீச்சு சார்பில் திசர பெரேரா, பினுர பெர்னாண்டோ மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 164 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை அடைவதற்கு சதீர சமரவிக்ரம, ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரின் ஆட்டத்தின் மூலம் சிறந்த ஆரம்பம் பெற்றது.

இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் சதீர சமரவிக்ரம 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் உடன் 44 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து ஜப்னா கிங்ஸ் அணி இறுதி நேரத்தில் சற்று தடுமாறிய போதும் அவ்வணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ ஏற்கனவே தான் பெற்ற அரைச்சதம் மூலம் கை கொடுத்திருக்க, ஜப்னா கிங்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களுடன் அடைந்தது.

ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.

இதேநேரம் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், பென்னி ஹொவல் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா கிங்ஸ் அணி வீரரான அவிஷ்க பெர்னாண்டோ தெரிவாக LPL தொடர் நாயகன் விருது சதீர சமரவிக்ரமவிற்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

Result


Jaffna Kings
164/8 (19.2)

Colombo Stars
163/5 (20)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Sadeera Samarawickrama b Thisara Perera 1 3 0 0 33.33
Dinesh Chandimal run out (Sadeera Samarawickrama) 49 40 4 1 122.50
Charith Asalanka c Vijayakanth Viyaskanth b Dunith wellalage 31 23 3 1 134.78
Ravi Bopara not out 47 33 1 3 142.42
Angelo Mathews b Mahesh Theekshana 12 11 0 1 109.09
Mohammad Nabi c Sadeera Samarawickrama b Binura Fernando 15 9 0 1 166.67
Benny Howell not out 1 1 0 0 100.00


Extras 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 163/5 (20 Overs, RR: 8.15)
Bowling O M R W Econ
Thisara Perera 2 0 16 1 8.00
Binura Fernando 4 0 48 1 12.00
Mahesh Theekshana 4 0 34 1 8.50
Zaman Khan 2 0 21 0 10.50
Vijayakanth Viyaskanth 4 0 24 0 6.00
Dunith wellalage 4 0 18 1 4.50


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Kasun Rajitha b Benny Howell 36 18 4 2 200.00
Avishka Fernando c Nawod Paranavithana b Suranga Lakmal 50 43 4 1 116.28
Afif Hossain c Angelo Mathews b Benny Howell 3 10 0 0 30.00
Sadeera Samarawickrama c Angelo Mathews b Suranga Lakmal 44 27 6 1 162.96
Shoaib Malik b Suranga Lakmal 10 6 0 1 166.67
Dunith wellalage c & b Mohammad Nabi 2 4 0 0 50.00
Thisara Perera c Dominic Drakes b Kasun Rajitha 6 6 1 0 100.00
Mahesh Theekshana run out (Ravindu Fernando) 1 1 0 0 100.00
Binura Fernando not out 4 1 1 0 400.00
Vijayakanth Viyaskanth not out 0 0 0 0 0.00


Extras 8 (b 0 , lb 1 , nb 0, w 7, pen 0)
Total 164/8 (19.2 Overs, RR: 8.48)
Bowling O M R W Econ
Kasun Rajitha 3.2 0 27 1 8.44
Mohammad Nabi 4 0 42 1 10.50
Seekkuge Prasanna 0.4 0 11 0 27.50
Ravi Bopara 1.2 0 14 0 11.67
Benny Howell 3 0 17 2 5.67
Charith Asalanka 2 0 15 0 7.50
Dominic Drakes 2 0 14 0 7.00
Suranga Lakmal 3 0 23 3 7.67



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<