LPL போட்டிகளை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசம்!

Lanka Premier League 2022

771

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) நொக்-அவுட் போட்டிகளை பார்வையிடுவதற்கான அனுமதியை இலவசமாக  பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள நொக்-அவுட் போட்டிகளிலிருந்து C Lower மற்றும் D Lower அரங்குகளுக்கு ரசிகர்கள் இலவசமாக உள்நுழைய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள LPL தொடரில் புதிய அணி!

அதேநேரம் ஏனைய அரங்குகளின் டிக்கெட்டுகளின் விலைகளையும் இலங்கை கிரிக்கெட் சபை சடுதியாக குறைத்துள்ளது. அதன்படி C மற்றும் D Upper அரங்குகளுக்கான விலை 300 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர்த்து A மற்றும் B Lower அரங்குகளுக்கான விலை 500 ரூபாவாகவும், A மற்றும் B Upper அரங்குகளின் விலை 750 ரூபாவாகவும், Grand Stand அரங்கின் விலை 1500 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

LPL தொடரில் இன்றைய தினம் (21) முதல் குவாலிபையர் போட்டியில் கண்டி பல்கோன்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், எலிமினேட்டர் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதவுள்ளன.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<