Home Tamil சாதனையுடன் முதல் வெற்றியைப் பதிவு செய்த தம்புள்ள ஓரா

சாதனையுடன் முதல் வெற்றியைப் பதிவு செய்த தம்புள்ள ஓரா

Lanka Premier League 2022

423

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (17) நடைபெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான 15ஆவது லீக் போட்டியில் 48 ஓட்டங்களால் தம்புள்ள ஓரா அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதன்மூலம் இம்முறை போட்டித் தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய தம்புள்ள ஓரா அணி, முதல் வெற்றியைப் பதிவு செய்ததுடன், கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 6 போட்டிகளில் ஆடி 4ஆவது தோல்வியை சந்தித்தது.

ஷெவோன் டேனியல் மற்றும் ஜோர்டன் கொக்ஸின் அபார துடுப்பாட்டம் மற்றும் பிரமோத் மதுசான், சிகந்தர் ராசா உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு என்பன தம்புள்ள ஓரா அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஓரா அணியின் தலைவர் தசுன் ஷானக முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய தம்புள்ள அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷெவோன் டேனியல் மற்றும் ஜோர்டன் கொக்ஸின் அரைச் சதங்களின் உதவியுடன் தம்புள்ள ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது.

தம்புள்ள ஓரா அணியின் துடுப்பாட்டம் சார்பில் முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தை மேற்கொண்ட ஷெவோன் டேனியல் மற்றும் ஜோர்டன் கொக்ஸ் ஜோடி, 163 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து LPL தொடர் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்து சாதனை படைத்தனர்.

முன்னதாக இந்த ஆண்டு LPL தொடரில் கண்டி பல்கொன்ஸ் அணியின் அண்ட்ரூ பிளச்சர் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஜோடி 156 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து சாதனை படைத்திருந்தனர்.

அதுமாத்திரமின்றி, தனது முதல் LPL அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த 18 வயதான ஷெவோன் டேனியல் 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் LPL தொடர் வரலாற்றில் அரைச் சதமடித்த இளம் வயது வீரர் என்ற சாதனையையும் தனதாக்கிக் கொண்டார்.

மறுபுறத்தில் ஜோர்டன் கொக்ஸ் 58 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களை எடுத்தார்.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் நுவன் பிரதீப் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 19.4 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று 48 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு உதார 32 ஓட்டங்களையும், அசாத் சபீக் 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.

தம்புள்ள ஓரா அணியின் பந்துவீச்சில் பிரமோத் மதுசான் 3 விக்கெட்டுகளையும், சிகந்தர் ராசா 2 விக்கெட்டுகளையும் அதிபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக தம்புள்ள ஓரா அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெவோன் டேனியல் தெரிவாகியிருந்தார்.

இந்த நிலையில், கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி பல்கொன்ஸ் அணிகளுக்குடையிலான 16ஆவது லீக் போட்டி இன்று (17) இரவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Dambulla Aura
178/5 (20)

Galle Gladiators
130/10 (19.4)

Batsmen R B 4s 6s SR
Shevon Daniel c Pulina Tharanga b Nuwan Pradeep 80 55 5 5 145.45
Jordan Cox c Nuwanidu Fernando b Nuwan Thushara 77 58 6 3 132.76
Dasun Shanaka c Lahiru Udara b Nuwan Pradeep 12 5 1 1 240.00
Bhanuka Rajapaksha c Pulina Tharanga b Nuwan Pradeep 0 1 0 0 0.00
Sikandar Raza run out (Imad Wasim) 0 3 0 0 0.00
Matthew Forde not out 0 0 0 0 0.00


Extras 9 (b 4 , lb 2 , nb 2, w 1, pen 0)
Total 178/5 (20 Overs, RR: 8.9)
Bowling O M R W Econ
Imad Wasim 4 0 38 0 9.50
Nuwan Thushara 4 0 29 1 7.25
Nuwan Pradeep 3 0 37 3 12.33
Wahab Riaz 3 0 28 0 9.33
Lakshan Sandakan 3 0 16 0 5.33
Thanuka Dabare 1 0 8 0 8.00
Iftikhar Ahmed 2 0 16 0 8.00


Batsmen R B 4s 6s SR
Thanuka Dabare c Shevon Daniel b Pramod Madushan 4 5 1 0 80.00
Kusal Mendis c Pramod Madushan b Dasun Shanaka 0 1 0 0 0.00
Lahiru Udara c Jordan Cox b Matthew Forde 32 32 4 0 100.00
Asad Shafiq c Dasun Shanaka b Pramod Madushan 28 14 3 2 200.00
Nuwanidu Fernando run out (Jordan Cox) 5 3 1 0 166.67
Iftikhar Ahmed c Ravindu Fernando b Sikandar Raza 21 21 1 1 100.00
Imad Wasim b Noor Ahmad  3 7 0 0 42.86
Wahab Riaz c Jordan Cox b Dilum Sudeera 13 8 1 1 162.50
Lakshan Sandakan b Pramod Madushan 4 16 0 0 25.00
Nuwan Pradeep c Shevon Daniel b Sikandar Raza 10 9 0 1 111.11
Nuwan Thushara not out 1 3 0 0 33.33


Extras 9 (b 1 , lb 4 , nb 1, w 3, pen 0)
Total 130/10 (19.4 Overs, RR: 6.61)
Bowling O M R W Econ
Dasun Shanaka 3 0 10 1 3.33
Pramod Madushan 2.4 0 17 3 7.08
Chamindu Wickramasinghe 1 0 18 0 18.00
Matthew Forde 2 0 23 1 11.50
Dilum Sudeera 4 0 35 1 8.75
Noor Ahmad  4 0 17 1 4.25
Sikandar Raza 3 0 5 2 1.67



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<