பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

New Zealand tour of Sri Pakistan 2022

229

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தில் அனுபவ சுழல் பந்துவீச்சாளர் இஸ் சோதி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியதை தொடர்ந்து அணித்தலைவராக வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.

>> டெஸ்ட் தலைவர் பதவியினைத் துறக்கும் கேன் வில்லியம்சன்

டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் குழாத்தில் அனுபவ சுழல் பந்துவீச்சாளர் இஸ் சோதி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இஸ் சோதி நியூசிலாந்து T20I அணியில் தொடர்ந்தும் விளையாடிவந்தாலும், இறுதியாக 2018ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார்.

இஸ் சோதியின் மீள்வருகையுடன், T20I போட்டிகளில் மிகச்சிறப்பாக பிரகாசித்துவரும் கிளேன் பிலிப்ஸ் 2020ம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த அறிமுகமாகாத பிளயர் டிக்னர் தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் டொம் லேத்தம், டார்லி மிச்சல், கேன் வில்லியம்சன், டெவோன் கொன்வே மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

>> Abu Dhabi T10 தொடரில் கலக்கிய இலங்கை வீரர்கள்!

முக்கிய வெளியேற்றமாக டிரெண்ட் போல்ட் அணியிலிருந்து வெளியேறியுள்ளதுடன், கெயல் ஜெமிஸன் உபாதையிலிருந்து குணமடையாத காரணத்தால் அவரும் நீக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி 2003ம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒருநாள் தொடர் ஜனவரி 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<