நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த கேன் வில்லியம்சன் அந்த பதவியினை துறப்பதாக நியூசிலாந்தின் கிரிக்கெட் சபை (NZC) குறிப்பிட்டுள்ளது.
>> தம்புள்ளை அணிக்கு ஐந்தாவது தொடர் தோல்வி
கடந்த 2016ஆம் ஆண்டு பிரண்டன் மெக்கலம் இடமிருந்து நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பதவியினைப் பெற்ற கேன் வில்லியம்சன், அன்றிருலிருந்து இன்று வரை நியூசிலாந்து அணியினை 38 டெஸ்ட் போட்டிகளில் வழிநடாத்தி இருப்பதோடு அதில் 22 போட்டிகளில் அவ்வணி வெற்றி பெறவும் காரணமாக அமைந்திருக்கின்றார்.
அத்துடன் முதன் முறையாக நடைபெற்ற ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து வெற்றியாளராக மாறவும் காரணமாக இருந்த கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் தலைவர் பதவியினை துறந்த போதும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் நியூசிலாந்து அணியினை தொடர்ந்தும் வழிநடாத்தவிருக்கின்றார்.
அதேநேரம் கேன் வில்லியம்சன் தன்னுடைய பதவியினை துறந்த நிலையில் டிம் சௌத்தி நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கு தலைவராக செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை நியூசிலாந்து டெஸ்ட் அணியின் பிரதி தலைவராக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் டொம் லேதம் இருப்பார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
டெஸ்ட் அணித் தலைவர் பதவியினை துறந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் கேன் வில்லியம்சன் தான் இந்தப் பதவியினை துறந்தமைக்கு பிரதான காரணம் பணிச்சுமை எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றார்.
>> பிராத்வைட், பேபியனின் பிரகாசிப்புடன் கண்டிக்கு 5ஆவது வெற்றி
இதேவேளை புதிய டெஸ்ட் தலைவரான டொம் லேதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புதிய பொறுப்பின் மூலம் நியூசிலாந்து டெஸ்ட் அணியினை வழிநடாத்தவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<