லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று (14) நடைபெற்ற ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான 13ஆவது லீக் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த கண்டி பல்கொன்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் வனிந்து ஹஸரங்க தலைமையிலான கண்டி பல்கொன்ஸ் அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள, ஜப்னா கிங்ஸ் அணி இம்முறை போட்டிகளில் தமது 2ஆவது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, களமிறங்கிய கிரேய்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பேபியன் அலென் அதிகபட்சமாக 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இவருக்கு அடுத்தப்படியாக அண்ட்ரூ பிளச்சர் 35 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுசங்க மற்றும் ஜேம்ஸ் புல்லர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
- கமிந்துவின் அபார துடுப்பாட்டத்துடன் தம்புள்ளயை வீழ்த்திய கண்டி
- கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி
- இறுதிவரை போராடியும் மெதிவ்ஸின் போராட்டம் வீண்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 161 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு சதீர சமரவிக்ரம மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் மாத்திரம் துடுப்பாட்டத்தில் வலுச்சேர்த்த போதும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதனால். அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 10 ஓட்டங்களால் வெற்றயீட்டியது.
ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம 41 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 48 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 20 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகளுடன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கண்டி பல்கொன்ஸ் அணியின் பந்துவீச்சில் கார்லோஸ் பிராத்வைட் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்த, வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுகளையும், பேபியன் அலென் மற்றும் இசுரு உதான ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்திpயிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி பல்கொன்ஸ் அணியின் பேபியன் அலென் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் கண்டி பல்கொன்ஸ் அணி தங்களுடைய ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், 5 போட்டிகளில் ஆடியுள்ள ஜப்னா கிங்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது தோல்வியை சந்த்தித்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்துக் கொண்டது.
இதனிடையே, நாளை (15) மற்றும் நாளை மறுதினம் (16) போட்டியின் ஓய்வு நாளாக அமையவுள்ளதுடன், எதிர்வரும் (17) சனிக்கிழமை முதல் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் LPL தொடரின் கடைசிச் சுற்று லீக் போட்டிகளுடன், பிளே-ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c & b Waqar Salamkheil | 15 | 20 | 2 | 0 | 75.00 |
Andre Fletcher | c Rahmanullah Gurbaz b Dunith wellalage | 35 | 22 | 4 | 2 | 159.09 |
Kamindu Mendis | c Sadeera Samarawickrama b James Fuller | 11 | 11 | 2 | 0 | 100.00 |
Ashen Bandara | c Waqar Salamkheil b James Fuller | 24 | 24 | 0 | 0 | 100.00 |
Carlos Brathwaite | lbw b Dunith wellalage | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Najibullah Zadran | Dunith wellalage b | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Wanidu Hasaranga | c Waqar Salamkheil b Dilshan Madushanka | 7 | 5 | 0 | 0 | 140.00 |
Fabian Allen | b Dilshan Madushanka | 47 | 23 | 3 | 4 | 204.35 |
Chamika Karunaratne | not out | 18 | 9 | 0 | 2 | 200.00 |
Isuru Udana | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0) |
Total | 160/8 (20 Overs, RR: 8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Thisara Perera | 1 | 0 | 5 | 0 | 5.00 | |
Dunith wellalage | 4 | 0 | 7 | 2 | 1.75 | |
Dilshan Madushanka | 3 | 0 | 41 | 2 | 13.67 | |
Waqar Salamkheil | 4 | 0 | 40 | 2 | 10.00 | |
Vijayakanth Viyaskanth | 4 | 0 | 38 | 0 | 9.50 | |
James Fuller | 4 | 0 | 28 | 2 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | c Najibullah Zadran b Isuru Udana | 4 | 5 | 1 | 0 | 80.00 |
Avishka Fernando | b Fabian Allen | 33 | 20 | 4 | 1 | 165.00 |
Dhananjaya de Silva | c Andre Fletcher b Carlos Brathwaite | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Sadeera Samarawickrama | c & b Wanidu Hasaranga | 48 | 41 | 5 | 0 | 117.07 |
Shoaib Malik | lbw b Wanidu Hasaranga | 8 | 2 | 0 | 0 | 400.00 |
Thisara Perera | c Andre Fletcher b Carlos Brathwaite | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Dunith wellalage | c Andre Fletcher b Carlos Brathwaite | 1 | 2 | 0 | 0 | 50.00 |
James Fuller | c Chamika Karunaratne b Carlos Brathwaite | 16 | 12 | 2 | 0 | 133.33 |
Vijayakanth Viyaskanth | b | 10 | 9 | 0 | 0 | 111.11 |
Dilshan Madushanka | run out (Isuru Udana) | 7 | 4 | 0 | 1 | 175.00 |
Waqar Salamkheil | b | 6 | 5 | 1 | 0 | 120.00 |
Extras | 15 (b 1 , lb 9 , nb 0, w 5, pen 0) |
Total | 150/9 (20 Overs, RR: 7.5) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Isuru Udana | 4 | 0 | 27 | 1 | 6.75 | |
Carlos Brathwaite | 4 | 0 | 18 | 4 | 4.50 | |
Fabian Allen | 3 | 0 | 39 | 0 | 13.00 | |
Wanidu Hasaranga | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Wanidu Hasaranga | 4 | 0 | 21 | 2 | 5.25 | |
Kamindu Mendis | 1 | 0 | 13 | 0 | 13.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<