Home Tamil கமிந்துவின் அபார துடுப்பாட்டத்துடன் தம்புள்ளயை வீழ்த்திய கண்டி

கமிந்துவின் அபார துடுப்பாட்டத்துடன் தம்புள்ளயை வீழ்த்திய கண்டி

Lanka Premier League 2022

231
Kandy Falcons vs Dambulla Aura

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் நேற்று (12) நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில், தம்புள்ள ஓரா அணியை எதிர்கொண்ட கண்டி பல்கொன்ஸ் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் கண்டி பல்கொன்ஸ் அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க, இந்த தோல்வியின் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்த தம்புள்ளை ஓரா அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, களமிறங்கிய கண்டி பல்கொன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 40 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இம்முறை போட்டித் தொடரில் தனது முதல் அரைச் சதத்தைப் பதிவு செய்தார். இவருக்கு அடுத்தப்படியாக அண்ட்ரூ பிளச்சர் 44 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 42 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சதுரங்க டி சில்வா மற்றும் ப்ரமோத் மதுசான் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஓரா அணி மீண்டும் துடுப்பாட்டத்தில் சறுக்கியதுடன், எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 116 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் 77 ஓட்டங்களால் கண்டி பல்கொன்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

சதுரங்க டி சில்வா மாத்திரம் போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் 25 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்;தார்.

கண்டி பல்கொன்ஸ் அணியின் பந்துவீச்சில் கார்லோஸ் பிராத்வைட் மற்றும் சமிந்து விஜேசிங்க ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், சாமிக்க கருணாரத்ன மற்றும் பேபியன அலென் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி பல்கொன்ஸ் அணியின் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் கண்டி பல்கொன்ஸ் அணி தங்களுடைய நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், தம்புள்ள ஓரா அணி தங்களுடைய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

அதேநேரம், புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ள கண்டி பல்கொன்ஸ் அணி இன்றைய தினம் (14) அதே 8 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ள ஜப்னா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதேபோல, புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களையும் பெற்றுக்கொண்டுள்ள கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகள் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

Result


Dambulla Aura
116/10 (14.2)

Kandy Falcons
193/3 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Paul van Meekeren b Chathuranga de Silva 26 20 3 0 130.00
Andre Fletcher run out (Jordan Cox) 44 31 4 3 141.94
Kamindu Mendis c Sikandar Raza b Pramod Madushan 58 40 9 0 145.00
Ashen Bandara not out 42 22 4 1 190.91
Najibullah Zadran not out 16 8 1 1 200.00


Extras 7 (b 0 , lb 1 , nb 1, w 5, pen 0)
Total 193/3 (20 Overs, RR: 9.65)
Bowling O M R W Econ
Dasun Shanaka 2 0 22 0 11.00
Pramod Madushan 4 0 39 1 9.75
Paul van Meekeren 4 0 37 0 9.25
Chathuranga de Silva 3 0 26 1 8.67
Noor Ahmad  4 0 26 0 6.50
Sikandar Raza 2 0 32 0 16.00
Ramesh Mendis 1 0 10 0 10.00


Batsmen R B 4s 6s SR
Shevon Daniel c Ashen Bandara b Chamika Karunaratne 9 5 1 0 180.00
Lasith Croospulle c Wanidu Hasaranga b Chamika Karunaratne 13 9 3 0 144.44
Jordan Cox c Andre Fletcher b Carlos Brathwaite 1 3 0 0 33.33
Bhanuka Rajapaksha c Minod Bhanuka b Chamindu Wijesinghe 18 22 0 1 81.82
Ramesh Mendis lbw b Carlos Brathwaite 4 7 0 0 57.14
Dasun Shanaka c Andre Fletcher b Carlos Brathwaite 0 1 0 0 0.00
Sikandar Raza c Ashen Bandara b Fabian Allen 1 3 0 0 33.33
Chathuranga de Silva c Fabian Allen b Chamindu Wijesinghe 25 15 4 1 166.67
Paul van Meekeren not out 10 8 1 0 125.00
Pramod Madushan c Chamika Karunaratne b Chamindu Wijesinghe 5 5 1 0 100.00
Noor Ahmad  lbw b Fabian Allen 20 8 1 2 250.00


Extras 10 (b 0 , lb 0 , nb 0, w 10, pen 0)
Total 116/10 (14.2 Overs, RR: 8.09)
Bowling O M R W Econ
Isuru Udana 1 0 8 0 8.00
Carlos Brathwaite 3 0 25 3 8.33
Chamika Karunaratne 2 0 11 2 5.50
Fabian Allen 1.2 0 5 2 4.17
Kamindu Mendis 2 0 19 0 9.50
Chamindu Wijesinghe 3 0 25 3 8.33
Wanidu Hasaranga 2 0 23 0 11.50



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<