”பொக்சிங் டே” டெஸ்டில் இருந்து வெளியேறும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்

193

கிறிஸ்மஸின் அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வூட் பங்கெடுக்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> LPL தொடரில் தசுன் ஷானகவுக்கு அபராதம்!

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த நிலையில் பிரிஸ்பேன் நகரில் டிசம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே ஜோஸ் ஹேசல்வூட் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழக்கின்றார்.

ஹேசல்வூட் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் போது உபாதைக்கு ஆளாகியதே அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாமல் போனமைக்குரிய காரணமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவரான பேட் கம்மின்ஸ் தனது உபாதையில் இருந்து குணமடைந்ததனை அடுத்து அவர் தென்னாபிரிக்க தொடரில் முழுமையாக விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பேட் கம்மின்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்றிருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதை காரணமாக பங்கேற்காது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> சாதனைகளை குவித்த இஷான் கிஷனின் கன்னி இரட்டைச்சதம்!

ஹேசல்வூட் இல்லாத நிலையில் மைக்கல் நேசர் அல்லது ஸ்கொட் போலன்ட் ஆகிய இருவரில் ஒருவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய குழாத்தின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக இருப்பர் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்க – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்குள் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>>  கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<