ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா அணிகள் இடையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 8ஆவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 51 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>> முதல் வெற்றியினைப் பதிவு செய்த கோல் கிளேடியேட்டர்ஸ்
நேற்று (11) பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தசுன் ஷானக்க தலைமையிலான தம்புள்ளை ஓரா அணி முதலில் ஜப்னா கிங்ஸ் அணியை துடுப்பாடப் பணித்தது.
அதன்படி போட்டியில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் அதிரடித் துடுப்பாட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்கள் எடுத்தது. அத்துடன் இது LPL போட்டிகள் வரலாற்றில் அணியொன்று பெற்ற கூடுதல் ஓட்டங்களாகவும் மாறியது.
ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் குர்பாஸ், அவிஷ்க ஜோடி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 133 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு ஜப்னா கிங்ஸ் அணியின் முதல் விக்கெட்டான குர்பாஸ் அரைச்சதம் விளாசி 35 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் பெற்றார்.
மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோ 30 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இவர் தவிர இறுதிவரை களத்தில் நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீர சமரவிக்ரம 22 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் உடன் 38 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இதேநேரம் சற்று மோசமாக அமைந்த தம்புள்ளை ஓரா அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 241 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
>> ஜிம்பாப்வே அணிக்காக களமிறங்கும் இங்கிலாந்து வீரர்
தம்புள்ளை ஓரா அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் தசுன் ஷானக்க 23 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை எடுத்திருக்க, பானுக்க ராஜபக்ஷ 31 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
ஜப்னா கிங்ஸ் பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க சுமின்த லக்ஷான் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்து தமது அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | c Jordan Cox b Lahiru Kumara | 73 | 35 | 7 | 5 | 208.57 |
Avishka Fernando | b Dushan Hemantha | 54 | 30 | 6 | 2 | 180.00 |
Dhananjaya de Silva | c Shevon Daniel b Lahiru Kumara | 19 | 12 | 2 | 1 | 158.33 |
Sadeera Samarawickrama | not out | 38 | 22 | 6 | 0 | 172.73 |
Shoaib Malik | c Dasun Shanaka b Pramod Madushan | 32 | 15 | 5 | 0 | 213.33 |
Thisara Perera | not out | 12 | 6 | 0 | 1 | 200.00 |
Extras | 12 (b 0 , lb 3 , nb 0, w 9, pen 0) |
Total | 240/4 (20 Overs, RR: 12) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tharindu Rathnayake | 3 | 0 | 34 | 0 | 11.33 | |
Lahiru Kumara | 4 | 0 | 56 | 2 | 14.00 | |
Pramod Madushan | 4 | 0 | 55 | 1 | 13.75 | |
Sikandar Raza | 4 | 0 | 35 | 0 | 8.75 | |
Dushan Hemantha | 4 | 0 | 44 | 1 | 11.00 | |
Dasun Shanaka | 1 | 0 | 13 | 0 | 13.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shevon Daniel | c Avishka Fernando b Binura Fernando | 29 | 20 | 5 | 1 | 145.00 |
Jordan Cox | c Rahmanullah Gurbaz b Binura Fernando | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Bhanuka Rajapaksha | c Dhananjaya de Silva b Dilshan Madushanka | 38 | 31 | 5 | 0 | 122.58 |
Tom Abell | b Dhananjaya de Silva | 12 | 10 | 1 | 0 | 120.00 |
Dasun Shanaka | c Dhananjaya de Silva b Suminda Lakshan | 44 | 23 | 4 | 3 | 191.30 |
Sikandar Raza | c Shoaib Malik b Suminda Lakshan | 8 | 6 | 1 | 0 | 133.33 |
Ravindu Fernando | not out | 19 | 13 | 1 | 0 | 146.15 |
Dushan Hemantha | c Shoaib Malik b Binura Fernando | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Tharindu Rathnayake | c Suminda Lakshan b Binura Fernando | 7 | 7 | 1 | 0 | 100.00 |
Pramod Madushan | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 24 (b 0 , lb 3 , nb 0, w 21, pen 0) |
Total | 189/8 (20 Overs, RR: 9.45) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 4 | 0 | 43 | 1 | 10.75 | |
Mahesh Theekshana | 4 | 0 | 31 | 0 | 7.75 | |
Binura Fernando | 4 | 1 | 22 | 4 | 5.50 | |
Dhananjaya de Silva | 4 | 0 | 40 | 1 | 10.00 | |
Suminda Lakshan | 4 | 0 | 50 | 2 | 12.50 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<