Home Tamil அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ் அணி

அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ் அணி

221

கண்டி பல்கொன்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் நான்காவது போட்டியில் கண்டி பல்கொன்ஸ் வீரர்கள் 5 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்து முன்னேறுகின்றனர்.

சகல துறையிலும் அசத்திய ஜப்னா அணிக்கு 2ஆவது வெற்றி

ஹம்பாந்தோட்டையில் நேற்று (07) ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இதன்படி ஆரம்பம் முதலே சற்றுத் தடுமாறத் தொடங்கிய அவரின் அணி முதலில் துடுப்பாட்டத்தின் போது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்கள் பெற்றது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணி துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மத்திய வரிசையில் களமிறங்கிய இளம் வீரர் மொவின் சுபாசிங்க 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் எடுக்க, இமாத் வஸிம் 34 ஓட்டங்களை பெற்றார்.

இதேவேளை கண்டி பல்கொன்ஸ் அணி பந்துவீச்சில் கார்லோஸ் பிராத்வைட் வெறும் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஸஹூர் கான் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 122 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணி குறித்த வெற்றி இலக்கை 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களுடன் அடைந்தது.

ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கை இலகுவாக எடுத்துக்கொண்டதா இலங்கை?

கண்டி பல்கொன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த கமிந்து மெண்டிஸ் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்தார்.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணி பந்துவீச்சில் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அது வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி பல்கொன்ஸ் அணி வீரர் கார்லோஸ் பிராத்வைட் தெரிவாகியிருந்தார்.

இனி லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி விளையாடும் அடுத்த போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) கொழும்பு ஸ்டார்ஸ் வீரர்களுடன் நடைபெற, கண்டி பல்கொன்ஸ் அணி ஜப்னா கிங்ஸ் வீரர்களை சனிக்கிழமை (10) எதிர்கொள்கின்றது.

போட்டியின் ஸ்கோர் விபரம்

Result


Galle Gladiators
121/8 (20)

Kandy Falcons
123/5 (15)

Batsmen R B 4s 6s SR
Thanuka Dabare c & b Zahoor Khan 0 2 0 0 0.00
Kusal Mendis c Zahoor Khan b Carlos Brathwaite 14 11 3 0 127.27
Azam Khan c Ashian Daniel b Carlos Brathwaite 1 4 0 0 25.00
Nuwanidu Fernando c Chamika Karunaratne b Carlos Brathwaite 13 8 1 1 162.50
Iftikhar Ahmed b Carlos Brathwaite 0 2 0 0 0.00
Movin Subasingha c Wanidu Hasaranga b Zahoor Khan 40 38 4 2 105.26
Imad Wasim c Ashian Daniel b Isuru Udana 34 39 2 0 87.18
Wahab Riaz c Isuru Udana b Wanidu Hasaranga 9 7 1 0 128.57
Pulina Tharanga not out 6 5 0 0 120.00
Nuwan Pradeep not out 2 4 0 0 50.00


Extras 2 (b 0 , lb 2 , nb 0, w 0, pen 0)
Total 121/8 (20 Overs, RR: 6.05)
Bowling O M R W Econ
Zahoor Khan 4 0 26 2 6.50
Carlos Brathwaite 4 1 14 4 3.50
Isuru Udana 4 0 19 1 4.75
Ashian Daniel 2 0 10 0 5.00
Wanidu Hasaranga 4 0 34 1 8.50
Fabian Allen 2 0 16 0 8.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Nuwan Thushara b Azam Khan 22 21 3 1 104.76
Andre Fletcher c Azam Khan b Nuwan Pradeep 20 14 3 1 142.86
Kamindu Mendis c Wahab Riaz b Pulina Tharanga 44 34 4 2 129.41
Ashen Bandara b Iftikhar Ahmed 3 5 0 0 60.00
Fabian Allen c Iftikhar Ahmed b Nuwan Pradeep 10 10 1 0 100.00
Carlos Brathwaite not out 4 4 1 0 100.00
Wanidu Hasaranga not out 8 3 2 0 266.67


Extras 12 (b 1 , lb 3 , nb 1, w 7, pen 0)
Total 123/5 (15 Overs, RR: 8.2)
Bowling O M R W Econ
Wahab Riaz 3 1 22 0 7.33
Nuwan Pradeep 3 0 34 2 11.33
Nuwan Thushara 3 0 18 1 6.00
Imad Wasim 3 0 18 0 6.00
Iftikhar Ahmed 1 0 7 1 7.00
Pulina Tharanga 2 0 20 1 10.00



>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<