Home Tamil வியாஸ்காந்த், பினுரவின் அசத்தலுடன் ஜப்னாவுக்கு முதல் வெற்றி

வியாஸ்காந்த், பினுரவின் அசத்தலுடன் ஜப்னாவுக்கு முதல் வெற்றி

1351
Sri Lanka Cricket

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று (06) நடைபெற்ற முதல் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி இம்முறை தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் அரைச் சதமடித்து அபாரம் காண்பித்த போதிலும், T20 உலகக் கிண்ணத்தின் போது உபாதைக்குள்ளாகிய பினுர பெர்னாண்டோ மற்றும் யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரது அபார பந்துவீச்சு ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

ஜப்னா கிங்ஸ் அணியை பொருத்தவரை ரஹ்மானுல்லா குர்பாஸ், டொம் கொலர் கெட்மோர், சொஹைப் மலிக் மற்றும் ஜேம்ஸ் புல்லர் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் களமிறங்க, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியில் அசாம் கான், இப்திகார் அஹ்மட், இமாத் வசீம் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய நான்கு பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கியிருந்தனர்.

LPL அணிகளின் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்களின் விபரம் வெளியானது!

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்திருந்த அவிஷ்க பெர்னாண்டோ 9 ஓட்டங்களையும், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒரு ஓட்டத்தையும் எடுத்து ஏமாற்றம் தந்திருந்தனர்.

தொடர்ந்து வந்த டொம் கொலர் கெட்மோர், அணித் தலைவர் திசர பெரேரா ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஏமாற்றம் கொடுத்த போதிலும், தனன்ஜய டி சில்வா (29 ஓட்டங்கள்), சொஹைப் மலிக் (30 ஓட்டங்கள்) மற்றும் துனித் வெல்லாலகேவ (30 ஓட்டங்கள்) ஆகியோரது துடுப்பாட்ட பங்களிப்போடு ஜப்னா கிங்ஸ் அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், இமாத் வசீம், நுவன் துஷார, நுவன் பிரதீப் மற்றும் இப்திகார் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 138 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்கு, நுவனிந்து பெர்னாண்டோ – குசல் மெண்டிஸ் ஜோடி சிறந்த ஆரம்பம் ஒன்றினை வழங்கியது.

இரண்டு வீரர்களும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் முதல் விக்கெட்டுக்காக 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அதனையடுத்து, கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் முதல் விக்கெட்டான நுவனிந்து பெர்னாண்டோ 15 ஓட்டங்களுடன் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார்.

கோல் அணிக்காக தனியொருவராக குசல் மெண்டிஸ் ஓட்டங்களைக் குவித்து வலுச்சேர்த்தாலும், ஜப்னா அணியின் பந்துவீச்சாளர்கள் கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்கு நெருக்கடி தர அவ்வணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து தடுமாறியது.

இறுதியில் குசல் மெண்டிஸ் அரைச் சதம் கடந்த 51 ஓட்டங்களை எடுத்து மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 113 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 24 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

LPL தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக இந்தப் பருவகாலத்தில் பெற்ற முதல் அரைச் சதத்துடன் குசல் மெண்டிஸ் 43 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 51 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டார்.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த பினுர பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா கிங்ஸ் அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த துனித் வெல்லாலகே தெரிவாகினார்.

சகலதுறையிலும் பிரகாசித்த ஜப்னா கிங்ஸ் அணியினர் இந்தப் போட்டியில் வெற்றிபெற்று, தங்களுடைய முதல் போட்டியில், முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளனர். இதேநேரம், LPL தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Jaffna Kings
137/10 (19.5)

Galle Gladiators
113/10 (20)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando lbw b Imad Wasim 9 9 1 0 100.00
Rahmanullah Gurbaz c Imad Wasim b Wahab Riaz 1 9 0 0 11.11
Dhananjaya de Silva c Azam Khan b Nuwan Pradeep 29 19 3 2 152.63
Tom Kohler-Cadmore c Movin Subasingha b Nuwan Thushara 6 6 1 0 100.00
Shoaib Malik c & b Iftikhar Ahmed 30 27 1 0 111.11
Thisara Perera c Nuwan Pradeep b Imad Wasim 16 16 1 0 100.00
Dunith wellalage c Azam Khan b Wahab Riaz 30 20 4 0 150.00
James Fuller c Nuwanidu Fernando b Iftikhar Ahmed 1 2 0 0 50.00
Vijayakanth Viyaskanth b Nuwan Thushara 4 4 0 0 100.00
Mahesh Theekshana c Nuwanidu Fernando b Nuwan Pradeep 0 3 0 0 0.00
Binura Fernando not out 3 4 0 0 75.00


Extras 8 (b 4 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 137/10 (19.5 Overs, RR: 6.91)
Bowling O M R W Econ
Wahab Riaz 4 0 23 2 5.75
Imad Wasim 4 0 22 2 5.50
Nuwan Thushara 3.5 0 31 2 8.86
Nuwan Pradeep 4 0 23 2 5.75
Pulina Tharanga 3 0 26 0 8.67
Iftikhar Ahmed 1 0 8 1 8.00


Batsmen R B 4s 6s SR
Nuwanidu Fernando c & b Dunith wellalage 15 21 1 0 71.43
Kusal Mendis lbw b Mahesh Theekshana 51 43 5 0 118.60
Azam Khan c Dunith wellalage b Vijayakanth Viyaskanth 5 6 1 0 83.33
Movin Subasingha run out (Thisara Perera) 2 3 0 0 66.67
Iftikhar Ahmed c Thisara Perera b Vijayakanth Viyaskanth 6 8 1 0 75.00
Imad Wasim c Sadeera Samarawickrama b Binura Fernando 17 22 0 1 77.27
Sammu Ashan c Sadeera Samarawickrama b James Fuller 1 2 0 0 50.00
Pulina Tharanga not out 1 4 0 0 25.00
Wahab Riaz run out (Sadeera Samarawickrama) 4 3 0 0 133.33
Nuwan Pradeep c Shoaib Malik b Binura Fernando 1 7 0 0 14.29
Nuwan Thushara c Sadeera Samarawickrama b Binura Fernando 0 1 0 0 0.00


Extras 10 (b 3 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 113/10 (20 Overs, RR: 5.65)
Bowling O M R W Econ
Thisara Perera 1 0 4 0 4.00
Mahesh Theekshana 4 0 24 1 6.00
Binura Fernando 3 1 22 3 7.33
James Fuller 4 0 19 1 4.75
Vijayakanth Viyaskanth 4 0 20 2 5.00
Dunith wellalage 3 0 15 1 5.00
Dhananjaya de Silva 1 0 5 0 5.00