Home Tamil மழையால் தடைப்பட்ட இலங்கையின் எதிர்பார்ப்பு

மழையால் தடைப்பட்ட இலங்கையின் எதிர்பார்ப்பு

360

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமப்படுத்துவதற்கான வாய்ப்பு துரதிஷ்டவசமாக இலங்கைக்கு கிடைக்காமல் போனது.

எவ்வாறாயினும், இரண்டு அணிகளுக்கும் ஐசிசி இன் 2023 ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் தொடரின் கீழ் தலா 5 புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டது. இதன்படி, இலங்கை 67 புள்ளிகளைப் பெற்று தற்போது 10ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 115 போனஸ் புள்ளிகளைப் பெற்று தற்போது 7ஆவது இடத்திலும் உள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், தொடரை சமப்படுத்தும் நோக்கில் கட்டாய வெற்றி ஒன்றுக்காக இன்றைய (27) போட்டியில் இலங்கை அணி களமிறங்கியது.

ஒருநாள் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி

இதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஹஸ்மத்துல்லா சஹிதி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இன்றைய போட்டியில் ஆடும் இரண்டு அணிகளையும் பொறுத்தவரையில் எந்தவித மாற்றங்களும் இன்றி முதல் போட்டியில் விளையாடிய அதே பதினொருவருடன் களமிறங்கின.

இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, தனன்ஞய லக்ஷான், கசுன் ராஜித, லஹிரு குமார

ஆப்கானிஸ்தான் பதினொருவர்

ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் சாஹ், ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), நஜிபுல்லா சத்ரான், குல்பதீன் நைப், மொஹமட் சத்ரான், மொஹமட் நபி, முஜிபுர் ரஹ்மான், பசால்ஹக் பரூக்கி, யமின் அஹ்மட்சாய், ரஷித் கான்

இதனையடுத்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற இப்ராஹிம் சத்ரான் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக வெறும் 10 ஓட்டங்களை பெற்றவாறு லஹிரு குமாரவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து ரஹ்மானுல்லா குர்பாஸுடன் ஜோடி சேர்ந்த ரஹ்மத் சாஹ் 2ஆவது விக்கெட்டுக்காக சத (113 ஓட்டங்கள்) இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டு வலுச்சேர்த்ததுடன், இந்த தொடரில் தமது 2ஆவது அரைச் சதங்களைப் பூர்த்தி செய்தனர்.

இதில் அதிரடியான முறையில் துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 73 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்து தனன்ஞய டி சில்வாவின் பந்துவீச்சிலும், ரஹ்மத் சாஹ் 7 பௌண்டரிகளுடன் 58 ஓட்டங்களை எடுத்து மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து வந்த ஆப்கானிஸ்தான் அணியின் மத்திய வரிசை வீரர்கள் இருவர் இலங்கையின் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் மஹீஷ் தீக்ஷனவின் சுழலில் ஆட்டமிழந்த நஜிபுல்லா சத்ரான் 6 ஓட்டங்களையும், வனிந்துவின் சுழலில் குல்பதீன் நைப் 6 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

 

இந்நிலையில் ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித் தலைவர் ஹஸ்மத்துல்லா சஹிதி, மொஹமட் நபி ஜோடி 30 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அந்த அணிக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்த போதிலும், துரதிஷ்டவசமாக அணித் தலைவர் ஹஸ்மத்துல்லா சஹிதி 28 ஓட்டங்களுடன் ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

இதன் பின்னர், மொஹமட் நபி ஆப்கானிஸ்தான் அணிக்காக போராட்டம் காண்பித்து 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை அதிரடியாக குவித்த போதிலும் கசுன் ராஜித மற்றும் லஹிரு குமாரவின் அபார பந்துவீச்சினால் அந்த அணிக்கு 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் கசுன் ராஜித் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்தார். அத்துடன், மஹீஷ் தீக்ஷன மற்றும் லஹிரு குமார ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்ற வனிந்து ஹஸரங்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 2.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. எனினும், தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நடுவர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

இதன் காரணமாக இந்த போட்டியானது இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வி இன்றி முடிவு கிடைக்காமல் போனது.

இதன்படி, முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

பெதும் நிஸ்ஸங்கவின் திறமையை புகழும் நவீட் நவாஸ்!

இந்த நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து நடைபெறவுள்ள 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடர் சமனில் முடிவடையும். தோல்வியடையும் பட்சத்தில் அல்லது மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால் இலங்கை அணி ஒருநாள் தொடரை இழககும்.

அதேபோன்று, இன்றைய போட்டி முடிவுடன் ஐசிசி இன் ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி 67 புள்ளிகளுடன் தொடர்ந்து 10ஆவது இடத்தில் நீடிக்கிறது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றியீட்டினால் மாத்திரமே இலங்கை அணிக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெற முடியும்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி இதே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
10/0 (2.4)

Afghanistan
228/10 (48.2)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Maheesh Theekshana b Dhananjaya de Silva 68 73 4 4 93.15
Ibrahim Zadran b Lahiru Kumara 10 18 2 0 55.56
Rahmat Shah lbw b Maheesh Theekshana 58 78 7 0 74.36
Hashmatullah Shahidi run out () 28 45 2 0 62.22
Najibullah Zadran lbw b Maheesh Theekshana 6 8 1 0 75.00
Gulbadin Naib b Wanidu Hasaranga 6 15 0 0 40.00
Mohammad Nabi c Dhananjaya de Silva b Kasun Rajitha 41 34 2 2 120.59
Rashid Khan c Kusal Mendis b Kasun Rajitha 3 8 0 0 37.50
Mujeeb ur Rahman c Dhananjaya de Silva b Kasun Rajitha 0 2 0 0 0.00
Fazal Haq Farooqi not out 2 7 0 0 28.57
Yamin Ahmadzai c Charith Asalanka b Lahiru Kumara 1 2 0 0 50.00


Extras 5 (b 1 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 228/10 (48.2 Overs, RR: 4.72)
Bowling O M R W Econ
Kasun Rajitha 9 2 31 3 3.44
Maheesh Theekshana 10 1 49 2 4.90
Lahiru Kumara 6.2 0 50 2 8.06
Wanidu Hasaranga 10 0 39 1 3.90
Dhananjaya Lakshan 3 0 21 0 7.00
Dhananjaya de Silva 10 0 37 1 3.70


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka not out 3 8 0 0 37.50
Kusal Mendis not out 2 8 0 0 25.00


Extras 5 (b 0 , lb 0 , nb 0, w 5, pen 0)
Total 10/0 (2.4 Overs, RR: 3.75)
Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 1.4 0 8 0 5.71
Mujeeb ur Rahman 1 0 2 0 2.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<