Home Tamil ஒருநாள் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி

ஒருநாள் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி

Afghanistan tour of Sri Lanka 2022

297

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

>> ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

மேலும் இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

முன்னதாக கண்டி பல்லேகல அரங்கில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருந்தனர்.

ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக நடைபெறும் இந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி துனித் வெலால்கேவிற்கு ஓய்வு வழங்கி தனன்ஞய லக்ஷானிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது .

இலங்கை XI – பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, தனன்ஞய லக்ஷான், கசுன் ராஜித, லஹிரு குமார

ஆப்கானிஸ்தான் XI – ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் சாஹ், ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), நஜிபுல்லா சத்ரான், மொஹமட் சத்ரான், மொஹமட் நபி, முஜிபுர் ரஹ்மான், பசால்ஹக் பரூக்கி, யமின் அஹ்மட்சாய்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்காகனிஸ்தான் அணி ஆரம்பத்தில் சில தவறுகளை விட்ட போதும், இலங்கை அணி அதனை சரியாக உபயோகப்படுத்த தவற ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகிய இருவரும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

இந்த வீரர்களில் ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைச்சதம் விளாசியதோடு 55 பந்துகளில் 9 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஏனைய ஆரம்ப வீரரான இப்ராஹிம் சத்ரான் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது சதத்தினைப் பெற்று ஆப்கானிஸ்தான் அணியினைப் பலப்படுத்தியிருந்தார். இப்ராஹிம் சத்ரான் 120 பந்துகளில் 11 பௌண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியில் இணையும் தனன்ஞய லக்ஷான்

தொடர்ந்து ஆப்கானிஸ்தான் இறுதி ஓவர்களில் தடுமாறிய போதும் முன்வரிசையில் ஆடிய ரஹ்மத் சாஹ் மற்றும் நஜிபுல்லா சத்ரான் ஆகியோரின் துடுப்பாட்ட இன்னிங்ஸ்கள் கைகொடுக்க அவ்வணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரஹ்மத் சாஹ் தன்னுடைய 21ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 2 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுக்க, நஜிபுல்லா சத்ரான் 25 பந்துகளை மாத்திரம் எதிர் கொண்டு 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 42 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களையும், மகீஷ் தீக்ஸன, லஹிரு குமார, தனன்ஞய லக்ஷான் மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 295 ஓட்டங்களை அடைய பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை கிரக்கெட் அணிக்கு குசல் மெண்டிஸ் சிறந்த ஆட்டத்தை வழங்கத் தவறி ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை நடந்தார். இதன் பின்னர் புதிய வீரர்களாக களம் வந்த தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா மற்றும் சரித் அசலன்க ஆகியோரும் எதிர்பார்த்த இன்னிங்ஸை வெளிப்படுத்த தவறி ஏமாற்றினர்.

இதன் பின்னர் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக வந்து களத்தில் இருந்த பெதும் நிஸ்ஸங்க, புதிய துடுப்பாட்டவீரராக வந்த அணித்தலைவர் தசுன் ஷானக்கவுடன் இணைந்து இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக இணைப்பாட்டம் (47) ஒன்றை பெற முயன்ற போதும் அது  ஷானக்கவின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. தசுன் ஷானக்க குல்படின் நயீப்பின் பந்துவீச்சில் பிடியெடுப்பினை வழங்கி 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் பெதும் நிஸ்ஸங்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் இலங்கை அணியின் வெற்றிக்காக போராடிய போதும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் சிறந்த செயற்பாடு காரணமாக 38 ஓவர்களில் அவர்கள் இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுக்களையும் கைப்பற்ற இலங்கை 238 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் வனிந்து ஹஸரங்க இறுதிவரை போராடி தன்னுடைய 4ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 46 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 4ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 83 பந்துகளில் 10 பௌண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

LPL 2022 தொடரில் பங்கெடுக்கும் வீரர்கள் குழாம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான பசால்ஹக் பரூக்கி 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, குல்படின் நயீப் 3 விக்கெட்டுக்களையும் யமின் அஹ்மட்சாய் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சத்ரான் தெரிவாகியிருந்தார். இனி இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
234/10 (38)

Afghanistan
294/8 (50)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz lbw b Wanidu Hasaranga 53 55 9 0 96.36
Ibrahim Zadran c Wanidu Hasaranga b Maheesh Theekshana 106 120 11 0 88.33
Rahmat Shah c Kusal Mendis b Lahiru Kumara 52 64 2 0 81.25
Najibullah Zadran c Kusal Mendis b Wanidu Hasaranga 42 25 5 1 168.00
Gulbadin Naib c Wanidu Hasaranga b Dhananjaya Lakshan 22 24 2 1 91.67
Rashid Khan run out (Ashen Bandara) 4 5 0 0 80.00
Mohammad Nabi c Dhananjaya Lakshan b Kasun Rajitha 2 3 0 0 66.67
Hashmatullah Shahidi run out (Ashen Bandara) 2 2 0 0 100.00
Mujeeb ur Rahman not out 1 1 0 0 100.00
Yamin Ahmadzai not out 0 1 0 0 0.00


Extras 10 (b 1 , lb 3 , nb 0, w 6, pen 0)
Total 294/8 (50 Overs, RR: 5.88)
Bowling O M R W Econ
Kasun Rajitha 10 0 56 1 5.60
Dhananjaya Lakshan 6 0 43 1 7.17
Lahiru Kumara 8 0 54 1 6.75
Dasun Shanaka 3 0 19 0 6.33
Wanidu Hasaranga 10 0 42 2 4.20
Maheesh Theekshana 10 0 62 1 6.20
Dhananjaya de Silva 3 0 14 0 4.67


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Fazal Haq Farooqi 85 83 10 0 102.41
Kusal Mendis lbw b Yamin Ahmadzai 1 5 0 0 20.00
Dinesh Chandimal b Fazal Haq Farooqi 14 11 3 0 127.27
Dhananjaya de Silva b Gulbadin Naib 16 16 3 0 100.00
Charith Asalanka c Ibrahim Zadran b Gulbadin Naib 10 18 0 0 55.56
Dasun Shanaka c Yamin Ahmadzai b Gulbadin Naib 16 27 2 0 59.26
Wanidu Hasaranga b Fazal Haq Farooqi 66 46 10 2 143.48
Dhananjaya Lakshan b Fazal Haq Farooqi 2 4 0 0 50.00
Maheesh Theekshana lbw b Yamin Ahmadzai 3 12 0 0 25.00
Kasun Rajitha lbw b Rashid Khan 8 5 0 0 160.00
Lahiru Kumara not out 0 1 0 0 0.00


Extras 13 (b 0 , lb 5 , nb 0, w 8, pen 0)
Total 234/10 (38 Overs, RR: 6.16)
Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 9 0 49 4 5.44
Yamin Ahmadzai 6 0 46 2 7.67
Mujeeb ur Rahman 5 0 33 0 6.60
Gulbadin Naib 8 0 32 3 4.00
Rashid Khan 8 0 40 1 5.00
Mohammad Nabi 2 0 27 0 13.50



முடிவு – ஆப்கானிஸ்தான் 60 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<