சாமிக்க கருணாரட்ன மீது தடை

1348

அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) விதிமுறைகளை மீறி நடந்தார் என்கிற குற்றச்சாட்டில், சாமிக்க கருணாரட்ன ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடையினைப் பெற்றிருக்கின்றார்.

BPL தொடரில் விளையாடவுள்ள 13 இலங்கை வீரர்கள்!

T20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலிய சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணியில் காணப்பட்ட சாமிக்க கருணாரட்ன, அங்கே கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறி நடந்தார் என்கிற குற்றச்சாட்டு முன்னதாக வைக்கப்பட்டிருந்ததோடு, இந்த விடயம் தொடர்பில் மூன்று பேர் கொண்ட குழுவின் மூலம் விசாரணை நடாத்தப்பட்டிருந்தது.

இந்த விசாரணைகளின் முடிவில் சாமிக்க கருணாரட்ன குற்றவாளியாக இனம் காணப்பட்டிருப்பதோடு, அவரும் தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டிருக்கின்றார்.

அதன்படி இதற்கு தண்டனையாக தற்போது அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒத்திவைக்கப்பட்ட ஓரு வருட போட்டித் தடையினைப் பெற்றிருக்கும் சாமிக்க கருணாரட்ன மீண்டும் இது போன்ற தவறுகளை செய்யும் சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட தடையினைப் பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்த T20I சம்பியன்!

இதேவேளை சாமிக்க கருணாரட்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை 5000 அமெரிக்க டொலர்களை அபாராதமாகவும் வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<