அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சிட்னியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தனுஷ்க குணத்திலக்க அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டு, கடந்த 11 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் குணதிலக்க இடைநீக்கம்!
தனுஷ்க குணதிலக்கவின் ஆரம்ப பிணை மனுக்களை அவுஸ்திரேலியா நீதிமன்றம் நிரகாரித்திருந்த போதும், தற்போது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகையானது இலங்கை ரூபாயில் சுமார் 5 கோடி 30 இலட்சம் ரூபா என கருதப்படுகின்றது.
அதேநேரம் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதும், அவர் தினமும் பொலிஸ் நிலையத்துக்கு சமுகமளிக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக்க சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த காரணத்தால், அவருக்கு எதிராக 4 விதமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<