T20 உலகக்கிண்ணத்தில் அணிகள் பெற்றுக்கொண்ட பரிசுத்தொகை தொடர்பிலான விபரத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (15) வெளியிட்டுள்ளது.
அதன்படி T20 உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 58 கோடி இலங்கை ரூபாய்) பரிசுத்தொகையாகயாக வழங்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 29 கோடி இலங்கை ரூபாய்) பரிசுதெ்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
>> தேசிய விளையாட்டு நிதியத்துக்கு 120 மில்லியன்களை வழங்கும் SLC
அதேநேரம் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதுடன், சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற மீதமுள்ள 8 அணிகளுக்கு 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர்த்து அனைத்து அணிகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஐக்கிய அரபு இராச்சியம், மே. தீவுகள், நமீபியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களுடன், அந்த அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற இலங்கை அணிக்கு 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதுடன், அணியின் 4 வெற்றிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என மொத்தமாக 230,000 அமெரிக்க டொலர்கள்கள் (சுமார் 83 கோடி 78 இலட்சம் ரூபாய்) இலங்கை அணிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<