இந்திய தொடருக்கான இலங்கை U19 மகளிர் குழாம் அறிவிப்பு

Sri Lanka U19 Women’s Team tour of India 2022

236

இந்தியாவில் நடைபெறவுள்ள நான்கு அணிகள் மோதும் 19 வயதின் கீழ் மகளிர் T20 தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை 19 வயதின் கீழ் அணியானது இந்தியா 19 வயதின் கீழ் ஏ அணி (A), இந்தியா 19 வயதின் கீழ் பி அணி (B) மற்றும் மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிகளை எதிர்கொண்டு விளையாடவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை U19 மகளிர் அணி!

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணியின் தலைவியாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள விஷ்மி குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் புதிய இளம் வீராங்கனைகள் பலரும் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் இந்தியா 19 வயதின் கீழ் பி அணியை இம்மாதம் 13ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், 15ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணியையும், 17ஆம் திகதி இந்தியா ஏ அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் குழாம்

விஷ்மி குணரத்ன (தலைவி), சஞ்சன கவிந்தி, உமயா ரத்நாயக்க, ரஷ்மி நேத்ராஞ்லி, ரஷ்மிகா செவ்வந்தி, தெவ்மி விஹாங்கா (உப தலைவி), மனுதி நாணயகார, சுமுது நிசன்சலா, பிரமோதா ஷைனி, விதுசிகா பெரேரா, துலங்கா திசாநாயக்க, ரிஷ்மி சன்ஜன, நெத்மி சேனாரத்ன, ஹரினி பெரேரா, விஹாரா செவ்வந்தி

இலங்கை அணியின் போட்டி அட்டவணை

திகதி போட்டி மைதானம்
நவம்பர் 13 இலங்கை U19 எதிர் இந்தியா U19 B விசாகப்பட்டினம்
நவம்பர் 15 இலங்கை U19 எதிர் மே.தீவுகள் U19 விசாகப்பட்டினம்
நவம்பர் 17 இலங்கை U19 எதிர் இந்தியா U19 A விசாகப்பட்டினம்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<