குணத்திலக்க தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விளக்கம்

1048

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனுஷ்க குணத்திலக்க தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

பாலியல் புகாரில் தனுஷ்க குணத்திலக்க கைது

இலங்கை T20 உலகக் கிண்ண அணியில் காணப்பட்ட தனுஷ்க குணத்திலக்க சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய பாலியல் புகாரின் அடிப்படையில் அவுஸ்திரேலிய பொலிஸார் மூலம் கைது செய்யப்பட்டிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இந்த நிலையில் தனுஷ்க குணத்திலக்க, உபாதை காரணமாக இலங்கையின் T20 உலகக் கிண்ண அணியில் இருந்து வெளியேறிய போதும் நாட்டுக்கு அனுப்பப்படாமல் அணியில் ஏன் தொடர்ந்தும் வைக்கப்பட்டார் என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை அணியின் முகாமைத்துவ குழு எடுத்த முடிவு ஒன்றுக்கு அமையவே உபாதையில் இருந்து விரைவாக குணமடைந்து வந்த குணத்திலக்க நாட்டுக்கு அனுப்பப்படாமல் மேலதிக வீரராக அணியில் தொடர்ந்தும் வைத்திருக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குணத்திலக்க  அவுஸ்திரேலிய நிலைமைகளுக்கு ஏற்கனவே தயாராகி இருந்ததன் காரணமாகவே அவர் தொடர்ந்தும் இலங்கை அணியில் தக்க வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டிருக்கின்றது. 

LPL தொடரின் விளம்பர தூதுவராகும் விவியன் ரிச்சர்ட்ஸ்

இதேவேளை தற்போது அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனுஷ்க குணத்திலக்க தொடர்பிலான முழுமையான விபரம், அவர் தொடர்பிலான  நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<