T20 உலகக் கிண்ண தொடரில் மஹேலவின் சாதனையினை முறியடித்த விராட் கோலி

301

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான விராட் கோலி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் பெற்ற அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்கிற புதிய சாதனையினை நிலை நாட்டியிருக்கின்றார்.

இந்திய T20I அணியின் தலைவராகும் ஹர்திக் பாண்டியா!

முன்னதாக T20 உலகக்க கிண்ண போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன 1016 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தார். மஹேல ஜயவர்தன இதற்காக 31 இன்னிங்ஸ்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இன்று (02) பங்களாதேஷ் அணிக்கெதிரான T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப் போட்டியில் விளையாடிய விராட் கோலி, அதில் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் பெற்றதோடு அதன் மூலம் T20 உலகக் கிண்ண போட்டிகள் வரலாற்றில் மொத்தமாக 1065 ஓட்டங்கள் எடுத்து, T20 உலகக் கிண்ண போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் மாறியிருக்கின்றார். அத்தோடு மஹேல ஜயவர்தனவின் சாதனையினை முறியடித்துள்ள விராட் கோலி T20 உலகக் கிண்ண போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற வெறும் 23 இன்னிங்ஸ்களை மாத்திரம் எடுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“தவறுகளை திருத்திக்கொண்டு களமிறங்க எதிர்பார்க்கிறோம்” – குசல் மெண்டிஸ்

இதேநேரம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற ஓட்டங்களோடு விராட் கோலி 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் 220 ஓட்டங்களுடன் தற்போது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<