T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறும் தனுஷ்க குணத்திலக்க

1969

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்டவீரரான தனுஷ்க குணத்திலக்க T20 உலகக் கிண்ணத்தில் இருந்து காயம் காரணமாக வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> விறுவிறுப்பாக மாறுமா இலங்கை – நெதர்லாந்து மோதல்?

தசை உபாதைக்கு ஆளான தனுஷ்க குணத்திலக்க இலங்கை அணி இறுதியாக விளையாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான T20 உலகக் கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் பங்கெடுக்காமல் போயிருந்தார். இந்நிலையில் அவர் உபாதையில் இருந்து விரைவில் குணமடைவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தனுஷ்க குணத்திலக்க இலங்கை அணியின் T20 உலகக் கிண்ண குழாத்தில் இருந்து வெளியேறியிருப்பதாக  கூறப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் தனுஷ்க குணத்திலக்கவின் பிரதியீட்டு வீரராக T20 உலகக் கிண்ண அணியில் மேலதிக வீரராக பெயரிடப்பட்ட துடுப்பாட்டவீரர் அஷேன் பண்டார இணைக்கப்பட்டிருக்கின்றார்.

>> விறுவிறுப்பாக மாறுமா இலங்கை – நெதர்லாந்து மோதல்?

இதேவேளை தனுஷ்க குணத்திலக்க இலங்கை அணியின் T20 உலகக் கிண்ண குழாத்தில் இருந்து வெளியேறும் மூன்றாவது வீரராக மாறுகின்றார். இதற்கு முன்னர் துஷ்மன்த சமீர மற்றும் டில்சான் மதுசங்க ஆகிய வீரர்கள் இலங்கை அணியில் இருந்து விலகிய நிலையில் அவர்களுக்குப் பதிலாக கசுன் ராஜித மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இலங்கை அணி T20 உலகக் கிண்ண தொடரின் முதல் சுற்றில் விளையாடவிருக்கும் இறுதிப் போட்டி நாளை (20) நெதர்லாந்து அணியுடன் கீலோங் ஆரங்கில் ஆரம்பமாகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<