ஆசியக் கிண்ண T20i தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை வீராங்கனைகளை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி T20 போட்டிகளாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரில் மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் சூடியிருக்க, இலங்கை மகளிர் அணி தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்கின்றது.
வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்குமா இலங்கை?
இரு அணிகளும் மோதிய இறுதிப் போட்டி இன்று (15) சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது. ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு அரையிறுதிகளில் இலங்கை வீராங்கனைகள் பாகிஸ்தான் மகளிர் அணியினை வீழ்த்தியும், இந்திய வீராங்கனைகள் தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியினை வீழ்த்தியும் தெரிவாகியிருந்தனர்.
பின்னர் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததோடு, இந்திய பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றனர்.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இனோக்கா ரணவீர 18 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற, இந்திய மகளிர் அணி பந்துவீச்சில் ரேனுகா சிங் 3 விக்கெட்டுக்களையும், ராஜேஷ்வரி கயாக்வாட் மற்றும் ஸ்னேஹ் ரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சுருட்டியிருந்தனர். இலங்கை அணியினர் ஒரு கட்டத்தில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 66 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 71 ஓட்டங்களுடன் அடைந்தது.
பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றி இலக்கினை அதிரடியான அரைச்சதம் ஒன்றினை விளாசி அடைவதற்கு உதவி செய்த ஸ்மிரிதி மந்தனா வெறும் 25 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
மறுமுனையில் இலங்கை மகளிர் அணி பந்துவீச்சு சார்பில் இனோக்கா ரணவீர மற்றும் கவீஷா டில்ஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக ரேனுகா சிங் தெரிவாக தொடர் நாயகி விருது இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamari Athapaththu | run out (Richa Ghosh) | 6 | 12 | 1 | 0 | 50.00 |
Anushka Sanjeewani | run out (Richa Ghosh) | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Harshitha Samarawickrama | c Richa Ghosh b Renuka Singh | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Nilakshi de Silva | b Rajeshwari Gayakwad | 6 | 8 | 1 | 0 | 75.00 |
Hasini Perera | c Smriti Mandhana b Renuka Singh | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Kavisha Dilhari | b Renuka Singh | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Oshadi Ranasinghe | b Rajeshwari Gayakwad | 13 | 20 | 1 | 0 | 65.00 |
Malsha Shehani | c & b Sneh Rana | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Sugandika Kumari | b Sneh Rana | 6 | 24 | 0 | 0 | 25.00 |
Inoka Ranaweera | not out | 18 | 22 | 2 | 0 | 81.82 |
Achini Kulasuriya | not out | 6 | 13 | 0 | 0 | 46.15 |
Extras | 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0) |
Total | 65/9 (20 Overs, RR: 3.25) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Deepti Sharma | 4 | 0 | 7 | 0 | 1.75 | |
Renuka Singh | 3 | 1 | 5 | 3 | 1.67 | |
Rajeshwari Gayakwad | 4 | 0 | 16 | 2 | 4.00 | |
Sneh Rana | 4 | 0 | 13 | 2 | 3.25 | |
Dayalan Hemalatha | 3 | 0 | 8 | 0 | 2.67 | |
Shafali Verma | 2 | 0 | 16 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shafali Verma | st Anushka Sanjeewani b Inoka Ranaweera | 5 | 8 | 0 | 0 | 62.50 |
Smriti Mandhana | not out | 51 | 25 | 6 | 3 | 204.00 |
Jemimah Rodrigues | b Kavisha Dilhari | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Harmanpreet Kaur | not out | 11 | 14 | 1 | 0 | 78.57 |
Extras | 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0) |
Total | 71/2 (8.3 Overs, RR: 8.35) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Oshadi Ranasinghe | 2.3 | 0 | 30 | 0 | 13.04 | |
Sugandika Kumari | 1 | 0 | 7 | 0 | 7.00 | |
Inoka Ranaweera | 3 | 0 | 17 | 1 | 5.67 | |
Kavisha Dilhari | 2 | 0 | 17 | 1 | 8.50 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<