ஆசியக் கிண்ண T20I தொடரில் இன்று ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணியினை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி டக்வெத் லூவிஸ் முறையில் 11 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
ஆசியக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி
இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ண T20I தொடரில் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி இன்று (02) சில்லேட் நகரில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ஹர்சிதா மாதவி 4 பெளண்டரிகள் அடங்கலாக 40 பந்துகளுக்கு 37 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் மஹிக்கா கெளர் மற்றும் வைஷ்னவி மகேஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 110 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி வெற்றி இலக்கிற்காக பயணித்து நான்கு ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், போட்டியில் மழையின் குறுக்கீடு உருவானது. இதனால் போட்டியின் வெற்றி இலக்கு டக்வெத் லூவிஸ் முறையில் 11 ஓவர்களுக்கு 66 ஓட்டங்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி 11 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 54 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணியின் T20 உலகக் கிண்ண ஆடை அறிமுகம்
ஐக்கிய அரபு இராச்சிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் வீராங்கனை ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களை தீர்தா சதீஷ் 19 ஓட்டங்கள் எடுத்து பதிவு செய்திருந்தார்.
இதேநேரம் இலங்கை மகளிர் அணி பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி மற்றும் இனோக்கா ரணவீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் பெற்று தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகியாக இலங்கை மகளிர் அணி வீராங்கணை ஹர்ஷிதா சமரவிக்ரம தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harshitha Samarawickrama | c Chaya Mughal b Vaishnave Mahesh | 37 | 40 | 4 | 0 | 92.50 |
Chamari Athapaththu | c Theertha Satish b Mahika Gaur | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Hasini Perera | st Suraksha Kotte b Theertha Satish | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Nilakshi de Silva | c Kavisha Egodage b Vaishnave Mahesh | 19 | 24 | 0 | 0 | 79.17 |
Kavisha Dilhari | c Chaya Mughal b Vaishnave Mahesh | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Anushka Sanjeewani | not out | 17 | 20 | 1 | 0 | 85.00 |
Malsha Shehani | b Samaira Dharnidharka | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Kaushani Nuthyangana | b Samaira Dharnidharka | 8 | 4 | 1 | 0 | 200.00 |
Sugandika Kumari | b Mahika Gaur | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Inoka Ranaweera | b Mahika Gaur | 6 | 3 | 1 | 0 | 200.00 |
Achini Kulasuriya | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0) |
Total | 109/9 (20 Overs, RR: 5.45) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chaya Mughal | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
Esha Oza | 2 | 0 | 15 | 0 | 7.50 | |
Mahika Gaur | 4 | 0 | 21 | 3 | 5.25 | |
Samaira Dharnidharka | 3 | 0 | 18 | 2 | 6.00 | |
Suraksha Kotte | 4 | 0 | 18 | 1 | 4.50 | |
Khushi Sharma | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Vaishnave Mahesh | 4 | 0 | 15 | 3 | 3.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Theertha Satish | c & b Sugandika Kumari | 19 | 19 | 2 | 0 | 100.00 |
Esha Oza | c Chamani Seneviratne b Kavisha Dilhari | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Kavisha Egodage | c Chamari Athapaththu b Kavisha Dilhari | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Natasha Cherriath | run out (Anushka Sanjeewani) | 9 | 15 | 0 | 0 | 60.00 |
Chaya Mughal | c & b Inoka Ranaweera | 7 | 7 | 0 | 0 | 100.00 |
Khushi Sharma | c Harshitha Madavi b Inoka Ranaweera | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Samaira Dharnidharka | not out | 8 | 5 | 0 | 0 | 160.00 |
Mahika Gaur | run out (Anushka Sanjeewani) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Vaishnave Mahesh | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0) |
Total | 54/7 (11 Overs, RR: 4.91) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sugandika Kumari | 2 | 0 | 15 | 1 | 7.50 | |
Achini Kulasuriya | 1 | 0 | 5 | 0 | 5.00 | |
Kavisha Dilhari | 2 | 0 | 7 | 2 | 3.50 | |
Inoka Ranaweera | 3 | 0 | 7 | 2 | 2.33 | |
Chamari Athapaththu | 2 | 0 | 10 | 0 | 5.00 | |
Malsha Shehani | 1 | 0 | 10 | 0 | 10.00 |
முடிவு – இலங்கை மகளிர் அணி 11 ஓட்டங்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<