அயர்லாந்தின் T20 உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

ICC T20 World Cup 2022

225

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அண்ட்ரூ பால்பர்னி தலைமையிலான அயர்லாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், பெரும்பாலான அணிகள் தங்களது குழாங்களை அறிவித்து விட்டன. இந்த நிலையில் அயர்லாந்து அணியும் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட தங்களது குழாத்தை நேற்று (20) அறிவித்துள்ளது.

இந்த குழாத்தில் பெரும்பாலும் வழக்கமான தோற்றம் இருந்தாலும், சில புதிய மற்றும் அனுபவமற்ற பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய இளம் வீரர்களைக் கொண்ட அயர்லாந்து அணியை அனுபவ வீரரான அண்ட்ரூ பில்பார்னி வழிநடத்தவுள்ளார்.

அதேபோல, அந்த அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் போல் ஸ்டெர்லிங் மற்றும் சகலதுறை வீரர் ஜோர்ஜ் டொக்ரெல் ஆகிய இருவரும் அயர்லாந்து அணியின் அனுபவ வீரர்களாக அணியில் இடம்பிடித்துள்ளளனர்.

மேலும் அயர்லாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஹெரி டெக்டர் மற்றும் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் மார்க் அடேர் ஆகிய இருவரும் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் அயர்லாந்து அணிக்கு நம்பிக்கை; கொடு;ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, கடந்த மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அயர்லாந்து அணியின் அனுபவ சகலதுறை வீரர்hன கெவின் ஓ பிரையன் T20 உலகக் கிண்ண அயர்லாந்து அணியில் இடம்பெறவில்லை.

அத்துடன், அந்த அணியின் அனுபவ சுழல் பந்துவீச்சாளரான அண்டி மெக்பிரைன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளி வீரர் சிமி சிங் அயர்லாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

32 T20I போட்டிகளில் விளையாடிள்ள மெக்பிரைன், கடந்த ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு அயர்லாந்து அணியில் இருந்து வெளியேறினார், அயர்லாந்து அணிக்கெதிரான அவர் விளையாடிய கடைசிப் போட்டி இதுவாகும். அத்துடன், அவர் விளையாடிய கடைசி ஏழு T20 போட்டிகளில் 10.53 என்ற சராசரியில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார், மேலும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றில் குழு B இல் இடம்பெற்றுள்ள அயர்லாந்து அணி, எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதி ஜிம்பாப்வே அணியை முதல் போட்டியில் சந்திக்கவுள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அயர்லாந்து குழாம்:

அண்ட்ரூ பால்பர்னி (தலைவர்), போல் ஸ்டெர்லிங் (உதவித் தலைவர்), மார்க் அடைர், கர்டிஸ் காம்பர், கிரேத் டெலனி, ஜோர்ஜ் டொக்ரெல், ஸ்டீபன் டொஹெனி, பிஒன் ஹேண்ட், ஜோஸ் லிட்டில், பெரி மெக்கார்தே, கோனர் ஒல்பர்ட், சிம்மி சிங், ஹெரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரைக் யங்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<