அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரின் பயிற்சிப்போட்டிகளில் இலங்கை அணியானது, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
ஐசிசி T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆயத்தமாக நடைபெறவுள்ள பயிற்சிப்போட்டிகளின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று வியாழக்கிழமை (08) வெளியிட்டுள்ளது.
>> T20 உலகக்கிண்ணத்துக்கான நெதர்லாந்து குழாம் அறிவிப்பு
அதன்படி இலங்கை அணியானது இரண்டு பயிற்சிப்போட்டிகளில் விளையாடவுள்ளது. ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஜிம்பாப்வே அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி, 13ம் திகதி அயர்லாந்து அணியை ஜன்க்ஸன் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
ஐசிசியின் T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் விளையாடவுள்ள அணிகளுக்கான பயிற்சிப்போட்டிகள் ஒக்டோபர் 10-13ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அணிகள் ஒக்டோபர் 17ம் திகதி முதல் 19ம் திகதிவரை பயிற்சிப்போட்டிகளில் விளையாடவுள்ளன.
ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான முதல் சுற்றுப்போட்டிகள் ஒக்டோபர் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் இலங்கை அணி நமீபியா அணியை ஜீலோங் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அதேநேரம், இலங்கை அணி தங்களுடைய முதல் சுற்றுப்போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயிற்சிப்போட்டிகளுக்கான அட்டவணை
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<