இங்கிலாந்து அணியில் இணையும் அலெக்ஸ் ஹேல்ஸ்

200

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சரித் அசலங்கவின் மோசமான துடுப்பாட்டம் தொடர்பில் கூறிய பானுக ராஜபக்ஷ!

இந்த அணியில் கடைசியாக 2019ஆம் ஆண்டிலேயே சர்வதேசப் போட்டியொன்றில் ஆடிய அதிரடி துடுப்பாட்டவீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றிருக்கின்றார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் உபாதைக்குள்ளாகிய ஜொன்னி பெயர்ஸ்டோவிற்குப் பதிலாக  இங்கிலாந்தின் T20I உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஹேல்ஸ் பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள 7 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் பங்கேற்பார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஜோஸ் பட்லர் மூலம் வழிநடாத்தப்படவுள்ள உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து அணியில் பிரதான துடுப்பாட்டவீரர்களாக டாவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் காணப்பட, மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சகலதுறைவீரர்களாக பலம் சேர்க்கின்றனர்.

அத்துடன் அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது பிரதான சுழல்வீரராக ஆதில் ரஷீட் உள்ள நிலையில் கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன் மற்றும் மார்க் வூட் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக பெறுமதி சேர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

T20I உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, அதற்கு முன்னர் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் ஆடும் 7 போட்டிகள் கொண்ட T20I தொடர் இம்மாதம் 20ஆம் திகதி தொடங்குகின்றது.

இங்கிலாந்து குழாம் (உலகக் கிண்ணம்)

ஜோஸ் பட்லர் (அணித்தலைவர்), ஹர்ரி புரூக், சேம் கர்ரன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன், டாவிட் மலான், ஆதீல் ரஷீட், பில் சோல்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

இங்கிலாந்து குழாம் (பாகிஸ்தான் T20I தொடர்)

ஜோஸ் பட்லர் (அணித்தலைவர்), மொயின் அலி, ஹர்ரி புரூக், ஜோர்டன் கோக்ஸ், சேம் கர்ரன், பென் டக்கெட், லியாம் டாவ்சன், ரிச்சாட் கிளீசன், அலெக்ஸ் ஹேல்ஸ், டொம் ஹேல்ம், வில் ஜேக்ஸ், டாவிட் மலான், ஆதீல் ரஷீட், பில் சோல்ட், ஒல்லி ஸ்டோன், ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், லூக் வூட், மார்க் வூட்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<