பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான முஷ்பிகுர் ரஹீம் T20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வடைவதாக அறிவித்துள்ளார்.
இலங்கையின் தந்திரோபாயங்களுக்கு பங்களாதேஷ் அதிருப்தி
பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலேயே ஆடுவதில் கவனம் செலுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ள முஷ்பிகுர் ரஹீம் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கின் வாயிலாக T20I போட்டிகளில் ஓய்வு பெறும் முடிவினை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
அத்துடன் முஷ்பிகுர் ரஹீம் உள்ளூர் T20 லீக் தொடர்களில் தொடர்ந்தும் ஆட விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முஷ்பிகுர் ரஹீம் T20I போட்டிகளில் ஓய்வு பெறும் விடயமானது அவரின் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிற்கு எதிராக வெளிப்படுத்திய மோசமான ஆட்டத்தினை அடுத்து வெளியாகியிருக்கின்றது.
முஷ்பிகுர் ரஹீம் குறித்த போட்டிகளில் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, மோசமான களத்தடுப்பினையும் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை முஷ்பிகுர் ரஹீம் T20I போட்டிகளில் இரண்டு அரைச்சதங்களை மாத்திரமே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தொடர்ச்சியான மோசமான ஆட்டங்களே T20I போட்டிகளில் அவரின் ஓய்வுக்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.
அதேநேரம் பங்களாதேஷ் T20I அணியில் இருந்து முஷ்பிகுர் ரஹீமுக்கு அவரின் மோசமான ஆட்டத்திற்காக சிறு காலத்திற்கு ஓய்வு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையிலையே, அவரின் ஓய்வுச் செய்தி வெளியாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
WATCH – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி தொடர்பில் கூறும் மஹீஷ் தீக்ஷன!
2006 ஆம் ஆண்டு தனது கன்னி T20 சர்வதேச போட்டியில் விளையாடியிருந்த முஷ்பிகுர் ரஹீம் இதுவரை 102 T20I போட்டிகளில் பங்கேற்று 1500 ஓட்டங்கள் வரை குவித்திருப்பதுடன், விக்கெட்காப்பாளராக 42 பிடியெடுப்புக்களையும், 30 ஸ்டம்பிங்குகளையும் மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<