Home Tamil மெண்டிஸ், ஷானக, அசிதவின் அற்புதங்களுடன் திரில் வெற்றிபெற்ற இலங்கை!

மெண்டிஸ், ஷானக, அசிதவின் அற்புதங்களுடன் திரில் வெற்றிபெற்ற இலங்கை!

Asia Cup 2022

977

ஆசியக்கிண்ணத் தொடரில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததுடன், அசித பெர்னாண்டோவுக்கு T20i அறிமுகத்தை கொடுத்திருந்தது.

>> தென்னாபிரிக்கா T20 லீக் தொடருக்கு புதிய பெயர்

பங்களாதேஷ் அணி மூன்று மாற்றங்களுடன் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்ததுடன், அற்புதமான துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்தியது. பவர்-பிளே ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 55 ஓட்டங்களை குவித்தது.

தொடர்ந்து மத்திய ஓவர்களில் சீறான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தபோதும், களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர். இதில் முக்கியமாக அபிப் ஹொஸைன் 22 பந்துகளுக்கு 39 ஓட்டங்களை விளாசியதுடன், மொசடாக் ஹொஸைன் 9 பந்துகளில் 24 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மெஹிதி ஹாஸன் மிராஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பங்களாதேஷ் வீரர்களின் சிறந்த பங்களிப்பின் உதவியுடன், அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி நிதானமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி 45 ஓட்டங்களை பெற்றிருந்தபோது முதல் விக்கெட்டை போதும், அதன் பின்னர் சரித் அசலங்க, தனுஷ்க குணதிலக்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க இலங்கை அணி 77 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, அணித்தலைவர் தசுன் ஷானகவுடன் மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தார். இவர்கள் இருவரும் 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன், அரைச்சதம் கடந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்த மெண்டிஸ் முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தார்.

மெண்டிஸ் ஆட்டமிழந்தாலும் 33 பந்துகளுக்கு 53 ஓட்டங்கள் என இலங்கை அணிக்கு வெற்றியிலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. எனினும் வனிந்து ஹஸரங்க தன்னுடைய விக்கெட்டை வீசியெறிய மீண்டும் இலங்கை அணி பின்னடைவை சந்தித்தது.

ஹஸரங்கவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தசுன் ஷானக மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தாலும் 45 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தசுன் ஷானக ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த சாமிக்க கருணாரத்ன (16 ஓட்டங்கள்) ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணிக்கு 7 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் தேவையாக இருந்தபோது அணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் அறிமுகப்போட்டியில் விளையாடிய அசித பெர்னாண்டோ முதல் பந்தில்

பௌண்டரியை அடித்ததுடன், அடுத்த ஓவரின் 2வது பந்தில் பௌண்டரியை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

குறிப்பாக பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்கள் 4 நோபோல் பந்துகள் மற்றும் 8 வைட் பந்துகள் என உதிரியான ஓட்டங்களை அதிகமாக வழங்கியதன் காரணமாக இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது. அசித பெர்னாண்டோ 3 பந்துகளில் 10 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்த எபடொட் ஹொஸைன் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப்போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக இலங்கை அணி சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

Result


Sri Lanka
184/8 (19.2)

Bangladesh
183/7 (20)

Batsmen R B 4s 6s SR
Mehidy Hasan Miraz b Wanidu Hasaranga 38 26 2 2 146.15
Sabbir Rahaman c Kusal Mendis b Asitha Fernando  5 6 1 0 83.33
Shakib Al Hasan (vc) b Maheesh Theekshana 24 22 3 0 109.09
Mushfiqur Rahim c Kusal Mendis b Chamika Karunaratne 4 5 0 0 80.00
Afif Hossain c Wanidu Hasaranga b Dilshan Madushanka 39 22 4 2 177.27
Mahmudullah c Chamika Karunaratne b Wanidu Hasaranga 27 22 1 1 122.73
Mosaddek Hossain not out 24 9 4 0 266.67
Mahedi Hasan lbw b Chamika Karunaratne 1 2 0 0 50.00
Taskin Ahmed not out 11 6 0 1 183.33


Extras 10 (b 4 , lb 6 , nb 0, w 0, pen 0)
Total 183/7 (20 Overs, RR: 9.15)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 4 0 26 1 6.50
Maheesh Theekshana 4 0 23 1 5.75
Asitha Fernando  4 0 51 1 12.75
Wanidu Hasaranga 4 0 41 2 10.25
Chamika Karunaratne 4 0 32 2 8.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Mustafizur Rahman b Ebadot Hossain 20 19 2 1 105.26
Kusal Mendis c Taskin Ahmed b Mustafizur Rahman 60 37 4 3 162.16
Charith Asalanka c Mahmudullah b Ebadot Hossain 1 3 0 0 33.33
Dhanushka Gunathilake c Taskin Ahmed b Ebadot Hossain 11 6 2 0 183.33
Bhanuka Rajapaksa c Sabbir Rahaman b Taskin Ahmed 2 4 0 0 50.00
Dasun Shanaka c Mosaddek Hossain b Mahedi Hasan 45 33 3 2 136.36
Wanidu Hasaranga c Mahedi Hasan b Taskin Ahmed 2 3 0 0 66.67
Chamika Karunaratne run out (Shakib Al Hasan (vc)) 16 10 0 0 160.00
Maheesh Theekshana not out 0 2 0 0 0.00
Asitha Fernando  not out 10 3 2 0 333.33


Extras 17 (b 0 , lb 5 , nb 4, w 8, pen 0)
Total 184/8 (19.2 Overs, RR: 9.52)
Bowling O M R W Econ
Mustafizur Rahman 4 0 32 1 8.00
Taskin Ahmed 4 0 24 2 6.00
Shakib Al Hasan 4 0 31 0 7.75
Ebadot Hossain 4 0 51 3 12.75
Mahedi Hasan 2.2 0 30 1 13.64
Mehidy Hasan Miraz 1 0 11 0 11.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<