ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக VVS லக்ஷ்மன்

256

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர டெஸ்ட் துடுப்பாட்டவீரரான VVS லக்ஷ்மன் செயற்பாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

புதிய சுழல் பந்துவீச்சு நாயகன் பிரபாத் ஜயசூரியவை பாராட்டும் மஹேல

ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராஹூல் ட்ராவிட்டுக்கு ஓய்வு வழங்கும் விதமாகவே  VVS லக்ஷ்மன் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அதேநேரம் மேற்கிந்திய தீவுகள், ஐக்கிய இராச்சிய சுற்றுத் தொடர்களில் இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ராத்தோர் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் அம்பிரேய் ஆகியோருக்கும், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியின் (NCA) சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் VVS லக்ஷ்மனிற்கு ஜிம்பாப்வே தொடரின் போது ரிஷிகேஷ் காந்திகார் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், சாய்ராஜ் பஹூதுலே பந்துவீச்சு பயிற்சியாளராகவும் சேவைகளை வழங்குகின்றனர்.

அதேவேளை ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் தலைவராக KL ராகுல் செயற்பட, பிரதி தலைவர் பொறுப்பு சிகார் தவானிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை இரு அணிகளும் மோதுகின்ற மூன்று போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடர் இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை ஹராரே நகரில் நடைபெறவுள்ளதோடு, இந்த ஒருநாள் தொடர் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிலும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்சிய T20 லீக்கில் தசுன் ஷானக்க

மறுமுனையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்வாங்கப்படாத இந்திய அணியின் வீரர்கள் ஆசியக் கிண்ண T20I தொடருக்காக இம்மாதம் 20ஆம் திகதி அழைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆசியக் கிண்ண T20I தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டி இம்மாதம் 28ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<