ஐக்கிய அரபு இராச்சிய T20 லீக்கில் தசுன் ஷானக்க

615

ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்படவுள்ள சர்வதேச லீக் T20 (IL T20) தொடரில் தசுன் ஷானக்க இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> CSA T20 தொடரின் Marquee பட்டியலில் இடம்பிடித்த இலங்கையின் 10 வீரர்கள்!

மொத்தம் ஆறு அணிகள் விளையாடவுள்ள இந்த IL T20 தொடரில் இணைந்த வீரர்களின் பட்டியல் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பட்டியலில் புதிய இணைப்பாக இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணியின் தலைவரும், நட்சத்திர சகலதுறை வீரருமான தசுன் ஷானக்க மாறியிருக்கின்றார்.

ஏற்கனவே இந்த IL T20 தொடரில் இலங்கை அணியினைச் சேர்ந்த வனிந்து ஹஸரங்க, பானுக்க ராஜபக்ஷ, துஷ்மன்த சமீர, நிரோஷன் டிக்வெல்ல, சரித் அசலன்க, சீக்குகே பிரசன்ன, இசுரு உதான மற்றும் லஹிரு குமார ஆகியோர் இணைந்ததாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தசுன் ஷானக்க IL T20 தொடரில் இணையும் அடுத்த இலங்கையராகவும் மாறியுள்ளார்.

எனினும் தசுன் ஷானக்கவோ அல்லது ஏனைய இலங்கை அணி வீரர்களோ IL T20 தொடரில் விளையாடும் அணிகள் குறித்து தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

இதேநேரம் தசுன் ஷானக்கவுடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான கீரோன் பொலார்ட், ட்வேய்ன் பிராவோ, நிகோலஸ் பூரான், இங்கிலாந்தின் ஒல்லி போப் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் பஸல்ஹக் பரூக்கி ஆகியோரும் ILT20 தொடரில் இணைந்த புதிய வீரர்களாக இருக்கின்றனர்.

>> CSA T20 தொடரின் Marquee பட்டியலில் இடம்பிடித்த இலங்கையின் 10 வீரர்கள்!

அதேநேரம் IL T20 தொடரில் பங்குபெறவிருக்கும் அணிகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் இந்தியாவினைச் சேர்ந்தவர்களாக இருப்பதன் காரணமாக, இந்த தொடரில் பங்கெடுக்கும் பாகிஸ்தான் அணி வீரர்கள் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் இருக்கும் அரசியல் குளறுபடிகள் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<