இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கை வீரர்களை எதிர்கால கிரிக்கெட் தொடர்களுக்காக தயார்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்த அழைப்பு T20 தொடரில், குசல் மெண்டிஸின் SLC ரெட்ஸ் அணியினை 08 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கும் தசுன் ஷானக்கவின் கீரின்ஸ் அணி தொடரில் முதல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>> முதல் போட்டியில் ஷானகவின் அணிக்கு தோல்வி
இன்று (10) மாலை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கீரின்ஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கீரின்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்கள் எடுத்தது.
கீரின்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் விளாசிய நிரோஷன் டிக்வெல்ல 8 பெளண்டரிகள் அடங்கலாக 56 பந்துகளுக்கு 76 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, தசுன் ஷானக்க 12 பந்துகளில் 3 பெளண்டரிகள் அடங்கலாக 21 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் ரெட்ஸ் அணி பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மதீஷ பத்திரன, சஹான் ஆராச்சிகே மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ரெட்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
>> கார் விபத்தில் உயிரிழந்த பிரபல கிரிக்கெட் நடுவர்
ரெட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக பானுக்க ராஜபக்ஷ 28 பந்துகளுக்கு 2 பெளண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் லசித் குரூஸ்புள்ளே 31 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையெகீரின்ஸ் அணியின் பந்துவீச்சில் நிமேஷ் விமுக்தி, நுவான் துஷார, தனன்ஞய லக்ஷான், லக்ஷான் சந்தகன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | b Sahan Arachchige | 10 | 20 | 1 | 0 | 50.00 |
Niroshan Dickwella | not out | 76 | 56 | 8 | 0 | 135.71 |
Dinesh Chandimal | c Kusal Mendis b Asitha Fernando | 15 | 9 | 3 | 0 | 166.67 |
Nuwanidu Fernando | b Asitha Fernando | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Dasun Shanaka | run out (Lasith Croospulle) | 21 | 12 | 3 | 0 | 175.00 |
Dhananjaya Lakshan | st Wanindu Hasaranga b Kusal Mendis | 19 | 12 | 3 | 0 | 158.33 |
Ramesh Mendis | c Lahiru Madushanka b Matheesha Pathirana | 11 | 8 | 1 | 0 | 137.50 |
Lakshan Sandakan | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 0 , lb 1 , nb 0, w 7, pen 0) |
Total | 161/6 (20 Overs, RR: 8.05) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Maheesh Theekshana | 4 | 0 | 30 | 0 | 7.50 | |
Asitha Fernando | 4 | 0 | 32 | 2 | 8.00 | |
Matheesha Pathirana | 4 | 0 | 25 | 1 | 6.25 | |
Sahan Arachchige | 1 | 0 | 13 | 1 | 13.00 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 30 | 1 | 7.50 | |
Prabath Jayasuriya | 2 | 0 | 20 | 0 | 10.00 | |
Lahiru Madushanka | 1 | 0 | 10 | 0 | 10.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lasith Croospulle | c Jeffrey Vandersay b Lakshan Sandakan | 31 | 24 | 3 | 0 | 129.17 |
Kusal Mendis | lbw b Nimesh Vimukthi | 30 | 32 | 3 | 0 | 93.75 |
Bhanuka Rajapakse | c Nuwanidu Fernando b Lakshan Sandakan | 34 | 28 | 2 | 0 | 121.43 |
Kamindu Mendis | b Ramesh Mendis | 24 | 22 | 0 | 1 | 109.09 |
Wanindu Hasaranga | c Ramesh Mendis b Nuwan Thushara | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Lahiru Madushanka | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Sahan Arachchige | not out | 19 | 8 | 4 | 0 | 237.50 |
Extras | 11 (b 0 , lb 3 , nb 0, w 8, pen 0) |
Total | 153/5 (20 Overs, RR: 7.65) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nimesh Vimukthi | 3 | 0 | 23 | 1 | 7.67 | |
Nuwan Thushara | 4 | 0 | 32 | 1 | 8.00 | |
Dhananjaya Lakshan | 4 | 0 | 39 | 1 | 9.75 | |
Jeffrey Vandersay | 2 | 0 | 9 | 0 | 4.50 | |
Lakshan Sandakan | 3 | 0 | 25 | 1 | 8.33 | |
Ramesh Mendis | 4 | 0 | 22 | 1 | 5.50 |
முடிவு – கீரின்ஸ் அணி 08 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<