அழைப்பு T20 தொடரை ஒழுங்கு செய்த இலங்கை கிரிக்கெட் சபை

451

ஆசிய கிண்ண T20I தொடர் மற்றும் T20I உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றுக்கு இலங்கை கிரிக்கெட் அணியை தயார்படுத்தும் நோக்கில், இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 2022 ஆம் ஆண்டுக்கான அழைப்பு T20 தொடரை (SLC Invitational T20) ஒழுங்கு செய்திருக்கின்றது.

>> சகலதுறைகளிலும் அபாரம் காண்பித்த சஜித்ர சேனநாயக்க

இந்த மாத இறுதியில் நடைபெறவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் மூன்றாவது பருவகாலத்திற்கான போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டதனை தொடர்ந்து அதற்கு பிரதியீடாக ஆசியக் கிண்ணம், உலகக் கிண்ணம் போன்ற எதிர்கால கிரிக்கெட் தொடர்களை கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கில் அழைப்பு T20 தொடரானது ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த அழைப்பு T20 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழுவினால் 60 முதல்தரக் கிரிக்கெட் வீரர்கள் தெரிவு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அழைப்பு T20 தொடரில் நான்கு அணிகள் பங்கேற்கவுள்ளதோடு, தொடரின் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் ஆட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பின்னர் இந்தப் போட்டிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகள் அடிப்படையில் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடும் இரண்டு அணிகளும் தெரிவு செய்யப்படவிருக்கின்றன.

>>  டெஸ்ட் அறிமுகம் பெறும் துனித் வெலால்கே <<

அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு, தொடரின் இறுதிப் போட்டியோடு சேர்த்து அழைப்பு T20 தொடரின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<