சகலதுறைகளிலும் அபாரம் காண்பித்த சஜித்ர சேனநாயக்க

805

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட உள்ளூர் கழகங்கள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் (SLC Major Clubs Limited Overs Tournament) கொண்ட தொடரில் சனிக்கிழமை (23) மொத்தமாக 11 போட்டிகள் நிறைவடைந்தன.

சாமிக கருணாரத்னவின் அதிரடியில் NCC கழகத்துக்கு வெற்றி

இந்த போட்டிகளில் கடற்படை அணியினை பிரதிநிதித்துவம் செய்து விளையாடிய சஜித்ர சேனநாயக்க, சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்ததோடு வெறும் 27 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், 59 ஓட்டங்களும் குவித்து பாணதுறை விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கடற்படை அணி 107 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்ய பங்களிப்புச் செய்திருந்தார்.

அதேநேரம் புளூம்பீல்ட் அணிக்கு எதிரான மோதலில் செபஸ்டியனைட்ஸ் கழகத்தினை பிரதிநிதித்துவம் செய்திருந்த மனேல்கார் டி சில்வா சதம் (103) விளாசி, தனது தரப்பு 02 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியினை பதிவு செய்ய காரணமாக மாறினார்.

இதேநேரம் SSC அணிக்காக பிரகாசித்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் நிபுன் தனன்ஞயவும் அபார சதம் விளாசி இருந்ததுடன், SSC அணி பதுரெலிய கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக வெற்றி பெற காரணமாக மாறினார். அதன்படி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிப்புன் தனன்ஞய 13 பௌண்டரிகள் அடங்கலாக 132 பந்துகளுக்கு 127 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் சீக்குகே பிரசன்னவின் அபார பந்துவீச்சோடு இராணுவப்படை அணியானது தொடரில் 10ஆவது வெற்றியினை விமானப்படைக்கு எதிராக பதிவு செய்து கொண்டது. சீக்குகே பிரசன்ன 27 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்த்து திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பில் மொஹமட் சிராஸ் 3 விக்கெட்டுக்களை சாய்த்து சிறப்பாக போதும், கோல்ட்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற அது போதுமாக அமைந்திருக்கவில்லை. கோல்ட்ஸ் அணி லங்கன் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக நான்கு விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்தது.

க்ரிஷானின் கன்னி சதத்தால் SSC கழகத்துக்கு வெற்றி

இதேவேளை சோனகர் அணிக்காக ஆடிய கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவர் இம்தியாஸ் ஸ்லாஷா 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த போதும் அவரது முயற்சி தமிழ் யூனியன் அணிக்கு எதிராக வீணாகியது. அந்தவகையில் சோனகர் அணிக்கு எதிரான மோதலில் தமிழ் யூனியன் அணி 60 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டது.

போட்டிகளின் சுருக்கம்

புளூம்பீல்ட் – 239/9 (50) யாஷ்பால் சிங் 62, பிரசான் விக்ரமசிங்க 43, மாதவ்வ வர்ணபுர 40, லோஹான் டி சொய்ஸா 4/26

செபஸ்டியனைட்ஸ் கி.க. – 244/8 (42.2) மனேல்கார் டி சில்வா 103, சானக்க கோமசரு 5/51

முடிவு – செபஸ்டியனைட்ஸ் கி.க. 2 விக்கெட்டுக்களால் வெற்றி


செரசன்ஸ் வி.க. – 205 (48.1) பஷால் சுபான் 71, கெளசான் குலசூரிய 3/19, கனிஷ்க மதுவன்த 3/45, அபிஷேக் ஆனந்தகுமார் 2/27

களுத்துறை நகர கழகம் – 171 (46.2) T. வீரசிங்க 58, கவிக டில்ஷான் 3/41 

முடிவு – செரசன்ஸ் வி.க. 34 ஓட்டங்களால் வெற்றி


SSC – 326/5 (50) நிப்புன் தனன்ஞய 127*, நுவனிது பெர்னான்டோ 85, ஸஹிட் மன்சூர் 2/51

பதுரெலிய கி.க – 224/7 (50) துனித் ஜயதுங்க 94

முடிவு – SSC 102 ஓட்டங்களால் வெற்றி


லங்கன் கி.க. – 171 (46.5) இசிவர திஸ்ஸநாயக்க 40*, மொஹமட் சிராஸ் 3/26

கோல்ட்ஸ் கி.க. – 172/4 (37.4) ஹஸான் துமின்து 59, தனன்ஞய லக்ஷான் 51

முடிவு – கோல்ட்ஸ் கி.க. 6 விக்கெட்டுக்களால் வெற்றி


தமிழ் யூனியன் – 251 (49.1) சதீர சமரவிக்ரம 69, டில்ருவான் பெரேரா 48, இம்தியாஸ் ஸ்லாஷா 4/42

சோனகர் கி.க. – 191 (46.5) ஜனிஷ்க பெரேரா 44, ரிசிர வீரசூரிய 36, சிரான் பெர்னாண்டோ 3/49

முடிவு – தமிழ் யூனியன் கி.க. 60 ஓட்டங்களால் வெற்றி


கடற்படை வி.க – 243 (49.5) மதுர மதுசங்க 67, சஜித்ர சேனநாயக்க 59, நிமேஷ் விமுக்தி 2/37

பாணதுறை வி.க. – 136 (29.2) கோசல ரவின்து 41, சஜித்ரா சேனநாயக்க 8/27 

முடிவு – கடற்படை வி.க. 107 ஓட்டங்களால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கி.க. – 129 (27.1) சமோத் சந்தரு 27, பினுர பெர்னாண்டோ 3/15

றாகம கிரிக்கெட் கழகம் – 130/7 (29.4) ஜனித் லியனகே 49*, அவிந்து தீக்ஷன 4/29

முடிவு – றாகம கி.க. 3 விக்கெட்டுக்களால் வெற்றி


BRC – 198 (47.1) லஹிரு சமரக்கோன் 63*, மோதித ரணதுங்க 37, அயேஷ் ஹர்சன 3/29, அருள் பிரகாசம் 3/29

கண்டி சுங்க வி.க. – 198 (34) நிம்னா பெர்னாண்டோ 53*, அகீல் இன்ஹாம் 39, துவின்து திலகரட்ன 4/32

முடிவு – BRC அணி 16 ஓட்டங்களால் வெற்றி


காலி கி.க. – 174 (42.3) தரிந்து அமரசிங்க 77, அரவிந்த பிரேமரட்ன 4/17

நுகேகொட வி.க. – 177/8 (48.2) ரணித லியனாராச்சி 57, பாக்யா திசநாயக்க 52, சுபானு ராஜபக்ஷ 4/36

முடிவு – நுகேகொட வி.க. 2 விக்கெட்டுக்களால் வெற்றி


குருநாகல் இளையோர் வி.க. – 142 (35) கயான் மனீஷான் 68, தனுஷ்க சந்தருவான் 4/24, பசிந்து உசெத்திகே 3/18

நீர்கொழும்பு கி.க. – 147/8 (39.5) திமுத் சந்தருவான் 53, மதுரங்க நவீன் 3/24

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி


இராணுவப்படை கி.க. – 185/9 (50) ஹிமாஷ லியனகே 59, கயான் சிறிசோம 4/26

விமானப்படை வி.க. – 76 (20.5) உதயவன்ஷ பரக்ரம 26, சீக்குகே பிரசன்ன 6/27, அசேல குணரட்ன 3/19

முடிவு – இராணுவப்படை வி.க. 109 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<