பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான சஹீன் அப்ரிடி, இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இரண்டாவது டெஸ்டிற்கான இலங்கை குழாத்தில் மாற்றம்!
சஹீன் அப்ரிடிக்கு, முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் ஏற்பட்ட முழங்கால் உபாதை அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனமைக்கு காரணமாக மாறியிருக்கின்றது.
சஹீன் அப்ரிடி இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இரு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை அடையவும் காரணமாக அமைந்திருந்தார்.
இதேநேரம் உபாதைக்குள்ளான சஹீன் அப்ரிடி தொடர்ந்தும் பாகிஸ்தான் அணிக் குழாத்தில் இருந்து தனது உபாதைக்கான சிகிச்சைகளை பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சறுக்கியது இலங்கை
அதேவேளை இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது. இந்த டெஸ்ட் போட்டி முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<