தமிழ் யூனியன் கழகத்துக்காக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய டில்ருவன்

Major Clubs Limited Over Tournament 2022

284

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் நேற்று (17) இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

இதில் பதுரெலிய விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் கழகமும், ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகமும் அபார வெற்றியைப் பதிவு செய்தது

பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பதுரெலிய விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் இசுரு உதார (51) மற்றும் ரவீன் டி சில்வா (50) ஆகிய இருவரும் அரைச் சதமடித்து வலுச்சேர்த்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பதுரெலிய விளையாட்டுக் கழகம் எதிரணியின் சுழல் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியால் 82 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இறுதியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 198 ஓட்டங்களவல் வெற்றியீட்டியதுடன், குழு A இல் 21 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

அந்த அணியின் பந்துவீச்சில் டில்ருவன் பெரேரா 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்;த்தியிருந்தார்.

இதனிடையே, ப்ளும்பீல்ட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கோல்ட்ஸ் கழகம் 122 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. கோல்ட்ஸ் கழகத்தின் துடுப்பாட்டத்தில் ஷிரான் பொன்சேகா (53) அரைச் சதமடித்து அசத்த, முதித்த லக்ஷான் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 280/9 (50) – இசுரு உதான 51, ரவீன் டி சில்வா 50, ஷிரான் பெர்னாண்டோ 35*, ருச்சிர கோஷித 3/46, சதுரங்க டி சில்வா 3/56

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 82/10 (28.5) – விஹான் குணசேகர 35, டில்ருவன் பெரேரா 5/8, நவோத் பரணவிதான 2/8, திலும் சுதீர 2/19

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 198 ஓட்டங்களால் வெற்றி


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 235/8 (50) – ஷிரான் பொன்சேகா 53*, சங்கீத் குரே 47, தனன்ஜய லக்ஷான் 45, ரவிந்து ரசன்த 32, மாதவ வர்ணபுர 4/45

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 113/10 (31) – யஷ்பால் சிங் 33, முதித்த லக்ஷான் 5/23, ரொஹான் சன்ஜய 2/30, அகில தனன்ஜய 2/31

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 122 ஓட்டங்களால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<