இலங்கை அணிக்கு எதிராக இன்று (16) நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் புதுமுக சகலதுறை வீரர் சல்மான் அலி அக்ஹா இணைக்கப்பட்டுள்ளதுடன், யசீர் ஷா மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
>> ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்த தயார்
சல்மான் அலி அக்ஹா கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இதில், 2019-2021 பருவகாலத்தில் 5 சதங்கள் மற்றும் 8 அரைச்சதங்கள் அடங்கலாக 1629 ஓட்டங்களை குவித்துள்ளார். இதன் காரணமாக டெஸ்ட் அணிக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.
இதேவேளை, யசீர் கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்ததுடன், குறித்த தொடரில் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். அதுமாத்திரமின்றி மொஹமட் நவாஸ் 6 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக 2016ம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பதினொருவர்
பாபர் அஷாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், அப்துல்லாஹ் சபிக், அஷார் அலி, ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், மொஹமட் நவாஸ், நசீம் ஷா, சல்மான் அக்ஹா, சஹீன் ஷா அப்ரிடி, யசீர் ஷா
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<