கண்டி பெல்கோன்ஸ் அணியின் தலைவராக ஹஸரங்க நியமனம்!

Lanka Premier League 2022

480

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடவுள்ள கண்டி பெல்கோன்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி வொரியர்ஸ் என கடந்த ஆண்டு பெயரிடப்பட்டிருந்த இந்த அணி, தற்போது கண்டி பெல்கோன்ஸ் என புதிய பெயருடன் விளையாடவுள்ளது.

LPL தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

வனிந்து ஹஸரங்க முதன்முறையாக தொழில்முறை லீக் போட்டியில் பங்கேற்கும் அணியொன்றின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய தலைவர் பதவி தொடர்பில் கருத்து வெளியிட்ட கண்டி பெல்கோன்ஸ் அணியின் உரிமையாளர் பர்வெஷ் கான்,

“வனிந்து ஹஸரங்கவை எமது அணியின் தலைவராக நியமிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இவருக்கு சர்வதேச T20 அனுபவம் உள்ளது. அவர் சிறந்த பணியை செய்வார் என நான் நம்புகிறேன்” என்றார்.

மூன்றாவது பருவகாலத்துக்கான LPL தொடர் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 21ம் திகதிவரை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானம் மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<