அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதனை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணி ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெற்ற தம்முடைய மூன்றாவது தொடரினை 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.
கண்டி பெல்கோன்ஸ் அணியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்!
மேலும் இந்த வெற்றியானது இலங்கை கிரிக்கெட் அணியினை 2021-23 பருவகாலத்திற்கான ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கும் கொண்டு சென்றிருக்கின்றது.
அவுஸ்திரேலிய – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருந்ததோடு, அந்த வெற்றியுடன் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மொத்தம் 84 புள்ளிகள் பெற்ற அவுஸ்திரேலிய அணி 77.78 என்கிற சதவீத வெற்றியோடு புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் காணப்பட்டிருந்தது. மறுமுனையில் இலங்கை கிரிக்கெட் அணி 40 புள்ளிகள் பெற்று 47.62 என்கிற சதவீத வெற்றியுடன் ஆறாம் இடத்தில் காணப்பட்டிருந்தது.
எனினும் இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றி 12 மேலதிக புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்திருப்பதோடு, இலங்கை அணியின் வெற்றி சதவீதத்தினையும் அது 54.17 ஆக அதிகரித்திருக்கின்றது.
இந்த வெற்றி சதவீத அதிகரிப்பு, இலங்கை கிரிக்கெட் அணியினை ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் தற்போது மூன்றாம் இடத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது.
கண்டி பெல்கோன்ஸ் அணியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்!
இதேநேரம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தோல்வியடைந்த காரணத்தினால் அது ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் அதன் வெற்றி சதவீதத்தினை 70 ஆக குறைக்க, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி புள்ளிகள் பட்டியலில் தமது முதல் இடத்தினை இழந்து இரண்டாம் இடத்திற்குச் சென்றிருக்கின்றது.
அதேநேரம் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 60 புள்ளிகளுடன் 71.43 என்கிற வெற்றி சதவீதத்துடன் காணப்படும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் இடத்தினை தற்போது பெற்றிருக்கின்றது.
இதேநேரம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் காணப்படுகின்றன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<