மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்படும் டெம்பா பவுமா, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் ஆடவிருக்கின்றது.
பிரிஸ்பேன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கவாஜா
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த T20I தொடரில் டெம்பா பவுமா முழங்கை உபாதையினை எதிர் கொண்டது அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆடாமல் போவதற்கு காரணமாக மாறியிருக்கின்றது. அதோடு பவுமா தனது உபாதையில் இருந்து மீள்வதற்கு இன்னும் சுமார் 8 வாரங்கள் வரை தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டிருக்கின்றது.
டெம்பா பவுமா இல்லாத நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தென்னாபிரிக்க ஒருநாள் அணியின் தலைவராக கேசவ் மஹராஜ் உம், T20I அணியின் தலைவராக டேவிட் மில்லரும் செயற்படவிருக்கின்றனர்.
இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறவுள்ள T20I தொடரில் 21 வயதே நிரம்பிய அறிமுக வேகப்பந்துவீச்சாளர் கேரால்ட் கோயெட்சே இடம்பெற்றிருக்கின்றார். இன்னும் கடைசியாக 2016ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் ஆடிய முன்வரிசைத் துடுப்பாட்டவீரர் ரீலி ரூசோவ்விற்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்க, இந்திய தொடரில் அறிமுகமாகிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் தென்னாபிரிக்க அணியில் தனது வாய்ப்பினை தொடர்ந்தும் தக்க வைத்திருக்கின்றார்.
உலகக் கிண்ணத்திற்கு முன்னர் முத்தரப்பு T20 தொடரில் ஆடும் நியூசிலாந்து
தென்னாபிரிக்க அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணமானது ஜூலை மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் குழாம் – கேசவ் மஹாராஜ் (தலைவர்), குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், ஹெய்ன்ரிச் கிளாஸ்ஸேன், ஜேன்மேன் மலான், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி ன்கிடி, அன்டைல் பெஹ்லுக்வேயோ, ட்வைன் ப்ரெடோரியஸ், என்ட்ரிச் நோர்கியே, தப்ரைஸ் சம்ஷி, ரஸ்ஸி வன்டர் டஸ்ஸேன், லிசாட் வில்லியம்ஸ், காயா சோன்டோ, கைல் வெர்ரெய்ன்
T20I குழாம் – டேவிட் மில்லர் (தலைவர்), கேரால்ட் கொயேட்சே, குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், ஹெய்ன்ரிச் கிளாஸ்ஸேன், கேசவ் மஹாராஜ், எய்டன் மார்க்ரம், லுங்கி ன்கிடி, அன்டைல் பெஹ்லுக்வேயோ, வேய்ன் பார்னல், ட்வைன் ப்ரெடோரியஸ், ககிஸோ றபாடா, ரில்லி ரூசோ, தப்ரைஸ் சம்ஷி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வன்டர் டஸ்ஸேன்
டெஸ்ட் குழாம் – டீன் எல்கார் (தலைவர்), சரேல் எர்வி, மார்கோ ஜான்சென், சிமோன் ஹார்மர், கேசவ் மஹாராஜ், எய்டன் மார்க்ரம், லுங்கி ன்கிடி, என்ட்ரிஜ் நோர்கியே, டுவான்னே ஒலிவர், கீகன் பீடர்சன், ககிஸோ றபாடா, றயான் ரிக்கெல்டோன், லுதோ சிபம்லா, ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன், கைல் வெர்ரெய்னே, காயா சோன்டோ, கிளன்டன் ஸ்டூர்மன்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<