இந்தியாவில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற கலப்புச் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் முல்லைத்தீவு மாங்குளத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
முல்லைத்தீவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இந்த வீராங்கனையின் வெற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த நிலையில், நாடு திரும்பிய விஜிதாவை கௌரவிக்கும் விசேட நிகழ்வு அவரது சொந்த ஊரான மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகி மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<