இலங்கை A மற்றும் அவுஸ்திரேலிய A அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (22) நிறைவுக்கு வந்தது.
இதில் அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஜிம்மி பியர்ஸன் அரைச் சதமடித்து அசத்த, இலங்கை அணியின் பந்துவீச்சில் 22 வயது இளம் சுழல் பந்துவீச்சாளரான லக்ஷித மானசிங்க 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
சுற்றுலா அவுஸ்திரேலிய A அணிக்கும், இலங்கை A அணிக்கும் இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி நேற்று (21) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
- அவுஸ்திரேலிய A அணிக்கு எதிராக சதத்ததை தவறவிட்ட நிபுன்
- முதல்தர ஒருநாள் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு
- இந்திய தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை மகளிர் குழாம்
இந்த நிலையில், போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் (22) அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது.
அந்த அணி 68 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மெட் ரென்ஸோ, டில்ஷான் மதுஷங்கவின் பந்துவீச்சில் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணித்தலைவர் மார்கஸ் ஹரிஸ் 39 ஓட்டங்களை எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து வந்த நிக் மெட்டின்ஸன், சுமிந்த லக்ஷானின் பந்துவீச்சில்
டக்-அவுட் ஆகி வெளியேற, முதல் டெஸ்ட்டில் இரண்டு அரைச் சதங்களைக் குவித்த ஜோஷ் பிலிப் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜிம்மி பியர்ஸன் நிதானமாக ஆடி அரைச் சதம் குவித்தாலும், பின்வரிசை வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் அவுஸ்திரேலிய A அணி, தனது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 254 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை A அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, 22 வயதுடைய இளம் சுழல் பந்துவீச்சாளரான லக்ஷித மானசிங்க 82 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முதல்தரப் போட்டிகளில் அவரது ஆறாவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.
மறுபுறத்தில் டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும், சுமிந்த லக்ஷான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 90 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி, இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 27 ஓட்டங்களை எடுத்து, 103 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 14 ஓட்டங்களுடனும், மொஹமட் சிராஸ் ஒரு ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.
போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நாளை (23) நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை A அணி – 330/9d (90) – நிபுன் தனன்ஜய 92, லஹிரு உதார 63, சஹன் ஆரச்சிகே 61, நுவனிது பெர்னாண்டோ 32, மார்க் ஸ்டிகிட்டி 4/69, ஸ்கொட் பொலன்ட் 4/38
அவுஸ்திரேலிய A அணி – 254 (74.3) – ஜிம்மி பியர்ஸன் 67*, மார்கஸ் ஹரிஸ் 39, மெட் ரென்ஸோ 35, லக்ஷித மானசிங்க 5/82, டில்ஷான் மதுஷங்க 3/43, சுமிந்த லக்ஷான் 2/67
இலங்கை A அணி – 27/2 (11) – கமிந்து மெண்டிஸ் 14*, மினோத் பானுக 8
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c Marcus Harris b Mark Steketee | 7 | 18 | 1 | 0 | 38.89 |
Lahiru Udara | c jimmy peirson b Mark Steketee | 63 | 133 | 3 | 0 | 47.37 |
Kamindu Mendis | c jimmy peirson b Mark Steketee | 14 | 12 | 1 | 0 | 116.67 |
Nuwanidu Fernando | c jimmy peirson b Aaron Hardie | 32 | 77 | 3 | 0 | 41.56 |
Sadeera Samarawickrama | c Matt Renshaw b Scott Boland | 29 | 32 | 4 | 0 | 90.62 |
Nipun Dananjaya | c jimmy peirson b Scott Boland | 92 | 130 | 4 | 0 | 70.77 |
Sahan Arachchige | c jimmy peirson b Scott Boland | 61 | 124 | 3 | 0 | 49.19 |
Suminda Lakshan | c Marcus Harris b Scott Boland | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Lakshitha Manasinghe | c Matt Renshaw b Mark Steketee | 8 | 7 | 2 | 0 | 114.29 |
Mohamed Shiraz | not out | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Dilshan Madusanka | not out | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Extras | 14 (b 4 , lb 4 , nb 6, w 0, pen 0) |
Total | 330/9 (90 Overs, RR: 3.67) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Scott Boland | 16 | 5 | 38 | 4 | 2.38 | |
Mark Steketee | 17 | 2 | 69 | 4 | 4.06 | |
Jon Holland | 19 | 1 | 91 | 0 | 4.79 | |
Aaron Hardie | 13 | 3 | 27 | 1 | 2.08 | |
Tanveer Sangha | 15 | 1 | 68 | 0 | 4.53 | |
Matt Renshaw | 10 | 1 | 29 | 0 | 2.90 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Matt Renshaw | c Minod Bhanuka b Dilshan Madusanka | 35 | 51 | 2 | 0 | 68.63 |
Marcus Harris | b Rasanjana | 39 | 60 | 3 | 0 | 65.00 |
Henry Hunt | c Kalana Perera b Rasanjana | 28 | 56 | 2 | 0 | 50.00 |
Nic Maddinson | b Suminda Lakshan | 0 | 12 | 0 | 0 | 0.00 |
Josh Philippe | lbw b Rasanjana | 16 | 12 | 2 | 0 | 133.33 |
jimmy peirson | not out | 67 | 112 | 3 | 0 | 59.82 |
Aaron Hardie | c Kamindu Mendis b Rasanjana | 24 | 41 | 3 | 0 | 58.54 |
Mark Steketee | b Dilshan Madusanka | 19 | 38 | 2 | 0 | 50.00 |
Scott Boland | lbw b Dilshan Madusanka | 5 | 46 | 0 | 0 | 10.87 |
Tanveer Sangha | c Minod Bhanuka b Rasanjana | 7 | 16 | 1 | 0 | 43.75 |
Jon Holland | c Nuwanidu Fernando b Suminda Lakshan | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Extras | 10 (b 2 , lb 2 , nb 6, w 0, pen 0) |
Total | 254/10 (74.3 Overs, RR: 3.41) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madusanka | 15 | 1 | 43 | 3 | 2.87 | |
Mohamed Shiraz | 10 | 1 | 33 | 0 | 3.30 | |
Sahan Arachchige | 6 | 0 | 25 | 0 | 4.17 | |
Lakshitha Manasinghe | 25 | 1 | 82 | 5 | 3.28 | |
Suminda Lakshan | 18.3 | 0 | 67 | 2 | 3.66 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c Matt Renshaw b Jon Holland | 8 | 35 | 1 | 0 | 22.86 |
Lahiru Udara | c jimmy peirson b Mark Steketee | 4 | 3 | 0 | 0 | 133.33 |
Kamindu Mendis | b Jon Holland | 48 | 80 | 6 | 0 | 60.00 |
Mohamed Shiraz | c jimmy peirson b Scott Boland | 7 | 38 | 0 | 0 | 18.42 |
Nuwanidu Fernando | c jimmy peirson b Scott Boland | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Sadeera Samarawickrama | c jimmy peirson b Mark Steketee | 20 | 23 | 2 | 0 | 86.96 |
Nipun Dananjaya | c Josh Philippe b Tanveer Sangha | 77 | 130 | 2 | 0 | 59.23 |
Sahan Arachchige | b Tanveer Sangha | 58 | 120 | 4 | 0 | 48.33 |
Lakshitha Manasinghe | lbw b Tanveer Sangha | 25 | 26 | 2 | 0 | 96.15 |
Suminda Lakshan | not out | 30 | 37 | 4 | 0 | 81.08 |
Dilshan Madusanka | b Scott Boland | 9 | 24 | 1 | 0 | 37.50 |
Extras | 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0) |
Total | 290/10 (87 Overs, RR: 3.33) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Scott Boland | 19 | 5 | 51 | 3 | 2.68 | |
Mark Steketee | 16 | 4 | 55 | 2 | 3.44 | |
Jon Holland | 22 | 2 | 85 | 2 | 3.86 | |
Aaron Hardie | 7 | 0 | 24 | 0 | 3.43 | |
Tanveer Sangha | 16 | 0 | 53 | 3 | 3.31 | |
Matt Renshaw | 4 | 2 | 8 | 0 | 2.00 | |
Nic Maddinson | 3 | 0 | 12 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Marcus Harris | lbw b Rasanjana | 11 | 38 | 0 | 0 | 28.95 |
Matt Renshaw | lbw b Rasanjana | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Henry Hunt | b Rasanjana | 107 | 212 | 3 | 0 | 50.47 |
Nic Maddinson | c & b Dilshan Madusanka | 18 | 39 | 2 | 0 | 46.15 |
Josh Philippe | c & b Dilshan Madusanka | 2 | 5 | 0 | 0 | 40.00 |
jimmy peirson | not out | 128 | 189 | 4 | 0 | 67.72 |
Aaron Hardie | not out | 78 | 94 | 6 | 0 | 82.98 |
Extras | 26 (b 13 , lb 1 , nb 8, w 4, pen 0) |
Total | 370/5 (95 Overs, RR: 3.89) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lakshitha Manasinghe | 32 | 4 | 116 | 3 | 3.62 | |
Dilshan Madusanka | 15 | 3 | 52 | 2 | 3.47 | |
Suminda Lakshan | 22 | 0 | 87 | 0 | 3.95 | |
Sahan Arachchige | 4 | 0 | 14 | 0 | 3.50 | |
Mohamed Shiraz | 11 | 0 | 37 | 0 | 3.36 | |
Kamindu Mendis | 7 | 0 | 15 | 0 | 2.14 | |
Nuwanidu Fernando | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
Nipun Dananjaya | 2 | 0 | 14 | 0 | 7.00 |