ஜாவா லேன் அணிக்கு இரண்டாவது வெற்றி; நிகம்பு யூத்திற்கு முதல் வெற்றி

239
Champions League 2022

சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் வாரத்திற்கான இறுதி இரண்டு போட்டிகளிலும் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் மற்றும் நிகம்பு யூத் அணிகள் வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

மொறகஸ்முல்ல வி.க எதிர் ஜாவா லேன் வி.க

ஏற்கனவே தமது முதல் வாரப் போட்டியில் வெற்றிகளை சுவைத்த இந்த இரண்டு அணிகளும் தமது இரண்டாவது வெற்றிக்காக ஞாயிற்றுக்கிழமை (12) சுகததாச அரங்கில் களம் கண்டன.

போட்டி ஆரம்பித்த முதல் சில நிமிடங்களில் ஜாவா லேன் அணிக்கு மத்திய களத்தின் ஒரு திசையில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது உள்வந்த பந்தினால் பின்கள வீரர் பிரன்சிஸ் ஜாவா லேன் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

அதன் பின்னர் போட்டியின் 90 நிமிடங்கள் வரை கோல் எதுவும் பெறப்படாத நிலையில், போட்டி நிறைவடைய சில நிமிடங்கள் எஞ்சியிருக்கும்போது ஒலவாலே ஜாவா லேன் அணிக்கான அடுத்த கோலைப் பெற்றார்.

எனவே, வெளிநாட்டு வீரர்கள் இருவரும் பெற்ற கோல்களால் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 2-0 என வெற்றி பெற்று, தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம்: மொறகஸ்முல்ல வி.க 0 – 2 ஜாவா லேன் வி.க

கோல் பெற்றவர்கள்

  • ஜாவா லேன் வி.க – T பிரன்சிஸ் 3’, O. ஒலவாலே 90+3’

சொலிட் வி.க எதிர் நிகம்பு யூத் கா.க

மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டி ஆரம்பமாகிய 5ஆவது நிமிடத்தில் பிரதீப் நிகம்பு யூத் அணிக்கான முதல் கோலைப் பெற, சொலிட் வீரர்நிஷான்த 20 நிமிடங்கள் கடந்த நிலையில் பதில் கோலைப் பெற்றார்.

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆரம்பமாகி 20 நிமிடங்களில் கிறிஸ்டீன் மூலம் நிகம்பு யூத் வீரர்கள் வெற்றி கோலைப் பெற்று, தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர். முதல் போட்டியை சோண்டர்ஸ் அணியுடன் சமநிலையில் முடித்த சொலிட் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

முழு நேரம்: சொலிட் வி.க 1 – 2 நிகம்பு யூத் கா.க

கோல் பெற்றவர்கள்

  • சொலிட் வி.க – ஹதுன்னெத்தி நிஷான்த 21’
  • நிபம்பு யூத் கா.க – பிரதீப் பெர்னாண்டோ 5’, கிறிஸ்டீன் பெர்னாண்டோ 65’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<